நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதல் இன்னிங்ஸில் 353 ரன்களை எடுத்தது. அதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி வாட்லிங், சாண்ட்னர் அதிரடியால் ரன்குவிப்பில் ஈடுபட்டது.
இதில் நியூசிலாந்து அணியின் பிஜே வாட்லிங் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தையும், மிட்சல் சாண்ட்னர் தனது முதல் சதத்தையும் பதிவு செய்து அசத்தினர். இதன் மூலம் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 615 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.
-
New Zealand have declared on 615/9!
— ICC (@ICC) November 24, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
BJ Watling and Mitchell Santner shine with the bat to help their side go 262 runs ahead of England's first-innings 353.#NZvENG 👇 https://t.co/IdOtHFVZap pic.twitter.com/2SEL2fU7LN
">New Zealand have declared on 615/9!
— ICC (@ICC) November 24, 2019
BJ Watling and Mitchell Santner shine with the bat to help their side go 262 runs ahead of England's first-innings 353.#NZvENG 👇 https://t.co/IdOtHFVZap pic.twitter.com/2SEL2fU7LNNew Zealand have declared on 615/9!
— ICC (@ICC) November 24, 2019
BJ Watling and Mitchell Santner shine with the bat to help their side go 262 runs ahead of England's first-innings 353.#NZvENG 👇 https://t.co/IdOtHFVZap pic.twitter.com/2SEL2fU7LN
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் கிரிக்கெட்டின் தந்தை என மார்தட்டிகொள்ளும் இங்கிலாந்து அணி, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அச்சாதனையானது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் இன்னிங்ஸில் அதிக வைடுகளை வீசிய முதல் அணி என்பது தான்.
நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி பந்துவீச்சாளர்கள் 21 வைடுகளை வீசியதன் மூலம் இந்த மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை சாம்பியன் பட்டம் வென்ற பாகிஸ்தான்!