ETV Bharat / sports

'டி20 உலகக்கோப்பையில் நோ பால்களை மூன்றாவது நடுவர் கண்காணிப்பார்' - ஐசிசி அறிவிப்பு - women's T20 WC

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் பந்துவீச்சாளர்கள் வீசும் நோ பாலை, மூன்றாவது நடுவர் கண்காணிப்பார் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

மகளிர் டி20 உலகக்கோப்பை, Third umpire, no-balls, women's T20 WC
Third umpire, no-balls, women's T20 WC
author img

By

Published : Feb 11, 2020, 7:40 PM IST

கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச்சாளர்களால் வீசப்படும் நோ பாலை கவனிப்பதற்குத் தனியாக, ஒரு அம்பயரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் எழுந்தது. இதற்கு முக்கியக் காரணம் கடந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் வீசப்பட்ட நோபால்களை மைதானத்தில் இருந்த கள நடுவர்கள் பார்க்கத் தவறியதே. மேலும், கடந்தாண்டு ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையிலான டெஸ்ட் போட்டியிலும் வீசப்பட்ட நோ பால்களை அம்பயர்கள் கவனிக்கத் தவறிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதுபோன்ற குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நோ பால்களை மூன்றாவது நடுவரே, கண்காணிக்கும் வகையிலான சோதனை முயற்சிகள் கடந்தாண்டு இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான டி20 தொடரின் போது கடைபிடிக்கப்பட்டது.

இதனிடையே, தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், 'ஆஸ்திரேலியாவில் இம்மாதம் இறுதியில் தொடங்கும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நோ பால்களை மூன்றாவது நடுவரே கண்காணிப்பார் என்று தெரிவித்துள்ளது. அதன்படி மூன்றவாது நடுவர் பந்து வீசும் தருணத்தில், பந்துவீச்சாளரின் கால் எங்குள்ளது என்பதைக் கவனிப்பார். அவர் அந்த பந்து நோ பாலாக வீசப்பட்டால் அது குறித்து கள நடுவரிடம் தெரிவிப்பார்’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், களத்தில் இருக்கும் நடுவர்கள், மூன்றாவது நடுவரின் அனுமதியில்லாமல் நோ பால்கள் குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் வெளிப்படுத்தக் கூடாது. ஏனெனில் மூன்றாவது நடுவர்களே நோ பால்களுக்கு பொறுப்பு என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த நடைமுறை 12 போட்டிகளில் கடைபிடிக்கப்பட்டது. அதில் வீசப்பட்ட 4 ஆயிரத்து 717 பந்துகள் கண்காணிக்கப்பட்டதில் 13 பந்துகள் நோ பால் என்பது கண்டறியப்பட்டது. இவையனைத்தும் துல்லியமாகப் பார்க்கப்பட்டது என்று ஐசிசியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஐசிசியின் பொது மேலாளர் ஜெப் ஆலர்டைஸ் கூறுகையில், ’இந்த புதிய நடைமுறை மகளிர் டி20 உலகக்கோப்பையில் நோ பால்களை குறைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்' என்றார்.

மேலும் ’நோ பால்களை கணிப்பது என்பது அம்பயர்களுக்குச் சவாலான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த புதிய நடைமுறையின் மூலம் போட்டியின் வேகம் குறையாமல் நோ பால்களை துல்லியமாகக் கணிக்க முடியும்' என்றார்.

மகளிர் டி20 உலகக்கோப்பை, Third umpire, no-balls, women's T20 WC
ஆஸ்திரேலிய அணி

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடர் இம்மாதம் 21ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. மொத்தம் பத்து அணிகள் இதில் பங்கேற்கின்றன. இதில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க: டெஸ்ட் ரேங்கிங்ஸ்: டாப் 5இல் இடம்பிடித்த பாபர் அசாம்!

Intro:Body:

Third umpire to monitor front foot no-balls during women's T20 WC: ICC

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.