இந்தாண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் வீரர்களின் ஏலத்திற்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து சில வீரர்களை நீக்க போவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அணி நிர்வாகம் நேற்று வெளியிட்டிருந்தது.
இதில் சாம் பில்லிங்ஸ், மோகித் ஷர்மா, டேவிட் வில்லே, துருவ் சோரே, சைத்தன்யா பிஸ்னோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதையடுத்து அடுத்தாண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கையிருப்பு தொகை ரூ. 6.2 கோடியாக இருந்தது. இதில் 2019 ஏலத்தில் மிச்ச தொகை ரூ. 3.2 கோடியும், இந்தாண்டுக்கான ஏலத்தொகை ரூ. 3 கோடியும் சேரும்.
இதோடு தற்போது வீரர்கள் நீக்கத்தின் மூலமாக ரூ. 8.4 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் மொத்தமாக ரூ. 14.6 கோடிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களின் பட்டியல்:
தோனி (கே), அம்பதி ராயுடு, ஆசிப், தீபக் சகார், டுவைன் பிராவோ, ஃபாஃப் டூ பிளஸிஸ், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர், ஜெகதீசன் நாராயண், கரண் சர்மா, கேதர் ஜாதவ், லுங்கி நிகிடி, மிட்சல் சாண்ட்னர், மோனு சிங், முரளி விஜய், ரவிந்திர ஜடேஜா, ரூத்துராஜ் கேக்வாத், ஷேன் வாட்சன், சார்துல் தாகூர், சுரேஷ் ரெய்னா.