ETV Bharat / sports

#ASHES: டிராவில் முடிந்தது இரண்டாவது டெஸ்ட்..! - மார்னஸ் லாபுக்ஸாக்னே

லண்டன்: லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது.

Second Test Match Draw
author img

By

Published : Aug 19, 2019, 10:14 AM IST

Updated : Aug 19, 2019, 1:20 PM IST

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. மழையால் முதல்நாள் ஆட்டம் கைவிடப்பட்ட நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. எனினும், ஜானி பெயர்ஸ்டோவின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 77.1 ஓவர்களில் 258 ரன்களை எட்டி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அரைசதமடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்
அரைசதமடித்த மகிழ்ச்சியில் ஸ்டீவ் ஸ்மித்

அதன்பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா அணி, ஸ்டூவர்ட் பிராடின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பொறுப்பான ஆட்டத்தினால் முதல் இன்னிங்ஸில் 250 ரன்களை எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

சதமடித்ததை கொண்டாடிய பென் ஸ்டோக்ஸ்
சதமடித்ததை கொண்டாடிய பென் ஸ்டோக்ஸ்

இதன்பின் இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்களை சேர்த்து இன்னிங்ஸை டிக்ளர் செய்தது. சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ்115 ரன்களை விளாசினார்.

அதன்பின் 267 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, மீண்டும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு மாற்று வீரராக மார்னஸ் லாபுக்ஸாக்னே நான்காவது வரிசையில் களமிறங்கினார். அவர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்ததன் மூல்ம் அணியை சரிவிலிருந்து மீட்டார்.

அரைசதமடித்த மகிழ்ச்சியில் மார்னஸ் லாபுக்ஸாக்னே

இறுதியாக ஐந்தாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்திருந்தது. இதனால் ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. சிறப்பாக விளையாடி சதமடித்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Intro:Body:

The Ashes: Second Test Match Draw between England - Australia

Conclusion:
Last Updated : Aug 19, 2019, 1:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.