ETV Bharat / sports

என்னோடு விளையாடியவர்களில் டெண்டுல்கர், லாரா மட்டுமே சிறந்தவர்கள்: வார்னே

author img

By

Published : Nov 11, 2020, 6:32 PM IST

1989 முதல் 2013ஆம் ஆண்டு வரை நான் சர்வதேச கிரிக்கெட் ஆடிய காலகட்டத்தில் டெண்டுல்கர், லாரா ஆகிய இரு பேட்ஸ்மேன்களே சிறந்தவர்கள் என வார்னே தெரிவித்துள்ளார்.

tendulkar-lara-easily-best-two-batsmen-ive-played-with-or-against-warne

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்னே செயல்பட்டார். ஐபிஎல் தொடர் முடிவடைந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தோடு பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்தப் புகைப்படத்தில் சச்சின் டெண்டுல்கர், பிரையன் லாரா, ஷேன் வார்னே ஆகியோர் சேர்ந்திருந்தனர். அதன் கீழ், நான் கிரிக்கெட் ஆடிய காலக்கட்டத்தில் என்னோடு ஆடியவர்களிலும், என்னை எதிர்த்து ஆடியவர்களிலும் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் என்றால் சச்சின் டெண்டுல்கரும், பிரையன் லாராவும்தான். நாங்கள் மூவரும் ஒன்றாக களத்தில் ஆடினால் உங்களுக்குப் பிடிக்குமா? என்ற கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பலதரப்பு ரசிகர்களும் பதிலளித்துவருகின்றனர். இதனால் ஷேன் வார்னேவின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: ”ரோஹித் கேப்டனாக்கப்படவில்லை என்றால், நமக்கு தான் இழப்பு” - கவுதம் கம்பீர் காட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.