இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான தொடர் நவம்பர் 3ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் அதற்காக இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் ஃபீல்டிங்க் பயிற்சியாளரான ஆர்.ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறுகையில், ‘ஆடுகளத்தில் ஜடேஜாவின் ஃபீல்டிங் இந்திய அணியின் நம்பிக்கையை உயர்த்துகிறது. அவருடைய அபார திறமையினால் எதிரணி வீரர்களை எப்போதும் பயத்திலேயே இருக்க வைப்பார். கடந்த பத்தாண்டுகளில் ஜடேஜாவே இந்திய அணியின் மிகச்சிறந்த ஃபீல்டர் என்று கூறுவேன். ஏனெனில் கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய அணியில் அவரைப்போல் ஃபீல்டிங் செய்தவர் எவரும் இல்லை’ என தெரிவித்தார்.
இந்திய அணியின் ஃபீல்டிங் குறித்த எதிரணியின் கருத்து சமீபகாலமாக மாறியுள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய அணியின் ஃபீல்டிங் ஆதிக்கம் செலுத்தியது குறித்து அந்த அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் பாராட்டியது நினைவில் இருக்கும். உலகக் கோப்பைப் போட்டியின்போதும் எதிரணிகள் இந்திய அணியின் ஃபீல்டிங் சிறப்பாக இருந்தது என்றே கூறியுள்ளனர். தற்போதைய உலக கிரிக்கெட் வீரர்களில் ஜடேஜா, கோலி, மார்டின் கப்தில், மேக்ஸ்வெல் ஆகியோர் உலகின் மிகச் சிறந்த ஃபீல்டர்கள் என்பது என்னுடைய கருத்து என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பும்ராவை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!