இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர், தற்போது இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இதில் ஏற்கனவே முதல் சுற்று முடிந்த நிலையில், இன்று முதல் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றது.
இதில் குரூப் ஏ,பி பிரிவுகளில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு அணியும், ஹிமாச்சல பிரதேச அணியும் விளையாடுகிறது. இந்த ஆட்டத்தில் தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாபா அப்ரஜித் அணியின் கேப்டனாக செயல்படுகிறார்.
மேலும் அனுபவ வீரர்களான முரளி விஜய், தினேஷ் கார்த்திக், முருகன் அஸ்வின் ஆகியோருடன் இன்றைய போட்டியில் விளையாடவில்லை. ஏற்கானவே தமிழ்நாடு அணி முதல் போட்டியில் கர்நாடக அணியுடன் 26 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றைய போட்டியில் முக்கிய வீரர்கள் விளையாடாதது குறித்து ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
-
Tamil Nadu have won the toss & elected to field first in the second #RanjiTrophy encounter. https://t.co/mRSTK8lXUV
— TNCA (@TNCACricket) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tamil Nadu have won the toss & elected to field first in the second #RanjiTrophy encounter. https://t.co/mRSTK8lXUV
— TNCA (@TNCACricket) December 17, 2019Tamil Nadu have won the toss & elected to field first in the second #RanjiTrophy encounter. https://t.co/mRSTK8lXUV
— TNCA (@TNCACricket) December 17, 2019
அதேபோல் ஹிமாச்சல பிரதேச அணியில் நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத காரணத்தால் இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது. ஏனேனில் இத்தொடருக்கான தமிழ்நாடு அணியின் கேப்டன் விஜய் சங்கர் உள்பட முன்னணி வீரர்கள் யாரும் இன்றைய போட்டியில் பங்கேற்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்துவரும் ஹிமாச்சல பிரதேசம் தற்போது வரை விக்கெட் இழப்பின்றி 12 ரன்களை எடுத்துள்ளது.
இதையும் படிங்க:அறிமுக வீரர்களுடன் களமிறங்கவுள்ள தென் ஆப்பிரிக்கா!