நடப்பு சீசனுக்கான சையத் முஷ்டாக் அலி டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழ்நாடு அணி, திரிபுரா அணியை எதிர்கொண்டது.
இதில் முதலில் டாஸ் வென்ற திரிபுரா அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணியின் வீரர்கள், சாய் கிஷோர், நடராஜனின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்களது வீக்கெட்டுகளை இழந்தனர். இதனால் திரிபுரா அணி 9 ரன்களுக்கு ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதனைத் தொடர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தாஸ், வட்ஸ் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதன் மூலம் திரிபுரா அணி 20 ஓவர்கள் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 79 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தாஸ் 44 ரன்களும், வட்ஸ் 28 ரன்களையும் எடுத்தனர். தமிழக அணி சார்பில் சாய் கிஷோர் நான்கு விக்கெட்டுகளையும், நடராஜன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அணியின் தொடக்க வீரர்களாக வாஷிங்டன் சுந்தர், பாபா அபரஜித் ஆகியோர் களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 46 ரன்களையும், அபரஜித் 33 ரன்களையும் குவித்தனர்.
-
Four wins in five games for TN!
— TNCA (@TNCACricket) November 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Aparajith remains not out on 33, Washington Sundar contributes 46 as TN chase down the target in 12.1 overs against Tripura. #TNvTPA #SyedMushtaqAliTrophy pic.twitter.com/0LNBssI9f0
">Four wins in five games for TN!
— TNCA (@TNCACricket) November 15, 2019
Aparajith remains not out on 33, Washington Sundar contributes 46 as TN chase down the target in 12.1 overs against Tripura. #TNvTPA #SyedMushtaqAliTrophy pic.twitter.com/0LNBssI9f0Four wins in five games for TN!
— TNCA (@TNCACricket) November 15, 2019
Aparajith remains not out on 33, Washington Sundar contributes 46 as TN chase down the target in 12.1 overs against Tripura. #TNvTPA #SyedMushtaqAliTrophy pic.twitter.com/0LNBssI9f0
இதன் மூலம் தமிழ்நாடு அணி 12.1 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த வெற்றியின் மூலம் தமிழ்நாடு அணி குரூப் பி பிரிவில் 16 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.
இதையும் படிங்க: 4.1 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்துவிட்ட தமிழ்நாடு அணி