இந்தியாவில் நடைபெற்றுவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவருகிறது. இதில் குரூப் ஏ, பி பிரிவுகளில் இடம்பிடித்துள்ள தமிழ்நாடு அணி, கர்நாடக அணியை எதிர்த்து விளையாடிவருகின்றது.
நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் டாஸ் வென்ற கர்நாடக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது. இந்தப் போட்டியில் மூன்றாவது சீசனின்போது நடுவர்கள் முடிவில் தவறு இருப்பதாகக் கூறி தமிழ்நாடு அணி வீரர்கள் குழுவாக விமர்சனம் செய்தனர்.
அதிலும் குறிப்பாக தமிழ்நாடு அணியின் நட்சத்திர வீரர் முரளி விஜயின் செயல் நடுவர்களுக்கு கோபத்தை உண்டாக்க, இதனால் அவருக்கு போட்டி கட்டணத்திலிருந்து 10 விழுக்காட்டை அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து தமிழ்நாடு அணியின் பயிற்சியாளர் டி. வாசு கூறுகையில், உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வேண்டும். இருபெரிய அணிகள் மோதும்போது, சிறிய விஷயங்கள்கூட மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:சாஹலுக்கு விருந்து உறுதி - ரோஹித் சர்மா!