ETV Bharat / sports

டி20 உலகக்கோப்பையை தொடங்குவது கடினமே!

மும்பை: இந்தாண்டு அக்டோபர் - நவம்பரில் டி20 உலகக்கோப்பைத் தொடரை நடத்துவது கடினமானது என பிசிசிஐ சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

t20-world-cup-in-october-seems-impractical-bcci-official

author img

By

Published : Apr 28, 2020, 12:39 PM IST

Updated : Apr 28, 2020, 1:34 PM IST

அனைத்து நாட்டு கிரிக்கெட் சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் கலந்துகொள்ளும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் டி20 உலகக்கோப்பையை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பிசிசிஐ முக்கிய அலுவலர் ஒருவர் பேசுகையில், ''டி20 உலகக்கோப்பைத் தொடர் நடத்துவதில் பல சிக்கல்கள் எழுந்துள்ளன. கரோனா பெருந்தொற்று சூழல் முடிவுக்கு வந்த பின், இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் விமான பயணங்களுக்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

கரோனா சூழல் முடிவடைந்த உடனே ரசிகர்களை அதிகளவில் ஒரே இடத்தில் குவிப்பதும் சரியானதல்ல. அதேபோல் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் உலகக்கோப்பை நடந்தால், போக்குவரத்து அந்த மாதங்களுக்குள் இயக்கப்படுமா என்பது சந்தேகமே.

சிலர் ஜூன் மாதத்தில் நிலைமை சரியாகும் என்கிறார்கள், சிலர் ஆகஸ்ட் மாதத்தில் சூழல் பழைய நிலைக்குத் திரும்பும் என்கிறார்கள். ஆனால் எப்போது நிலைமை சீராகும் என்பது சந்தேகமே.

அதேபோல் டி20 உலகக்கோப்பை நடத்தும்போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்கு ஐசிசி, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் பொறுப்பேற்றுக்கொள்ளுமா என்பதும் கேள்விக்குறியே.

ஏனென்றால் மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அரசுதான் முடிவெடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய அரசு இதற்கு சம்மதிக்குமா என்பதும் தெரிய வேண்டும். கரோனா சூழல் மற்ற நாடுகளில் எவ்வளவு நாள்களுக்கு நீடிக்கும் என்பதும் தெரியவில்லை. அதனால் மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களின் முடிவுகள் மிகவும் முக்கியமானவை.

எல்லாவற்றையும் கடந்து போட்டியைப் பார்க்க வரும் ரசிகர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம். அதனால் திட்டமிட்டபடி அக்டோபர் - நவம்பர் மாதங்களில் டி20 உலகக்கோப்பையை நடத்துவது கடினமான விஷயம்'' என்றார்.

இதையும் படிங்க: என்னுடைய வளர்ச்சிக்கு காரணம் டிராவிட் தான்- விஜய் சங்கர்

Last Updated : Apr 28, 2020, 1:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.