ETV Bharat / sports

டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு! - விராட் கோலி

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்துள்ளது.

T20: India Vs England toss update
T20: India Vs England toss update
author img

By

Published : Mar 16, 2021, 6:42 PM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளில், ஒன்றில் இங்கிலாந்து அணியும், மற்றொன்றில் இந்திய அணியும் வெற்றி பெற்று தொடரை சமனில் வைத்துள்ளன.

இந்நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மார்ச் 16) நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஈயான் மோர்கன், முதலில் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைத்துள்ளார்.

இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ்விற்கு பதிலாக, துணைக்கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணியில் வேகப்பந்து வீச்சாளர் டாம் கரனிற்கு பதிலாக, மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஷர்துல் தாக்கூர்.

இங்கிலாந்து அணி: ஈயன் மோர்கன் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரன், கிறிஸ் ஜோர்டன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், மார்க் வுட்.

இதையும் படிங்க: ‘ஒருநாள், டி20 கம்பேக் குறித்த கேள்விகள் சிரிப்பை வரவைக்கின்றன’ - அஸ்வின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.