இந்தியாவின் உள்ளூர் டி20 தொடரான சயீத் முஷ்டாக் அலி இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எலைட் குருப் பி பிரிவில் நடைபெற்ற லீக் போட்டியில் தமிழ்நாடு அணி - ஜார்கண்ட் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஜார்கண்ட் முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி தமிழ்நாடு அணியின் தொடக்க வீரர்களாக ஹரி நிஷாந்த் - ஜெகதீசன் களமிறங்கினர். இதில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர்.
அதன்பின் 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜெகதீசன் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த துணைக்கேப்டன் விஜய் சங்கர் 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிர்பாராத விதமாக ஆட்டமிழந்தார்.
பின்னர் ஹரி நிஷாந்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் விளையாடி வந்த ஹரி நிஷந்தும் அரைசதமடித்து அசத்தினார்.
இதன் மூலம் தமிழ்நாடு அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்களை எடுத்தது. தமிழ்நாடு அணி தரப்பில் ஹரி நிஷாந்த் 91 ரன்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அதன்பின் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஜார்கண்ட் அணி தொடக்கம் முதலே தமிழ்நாடு பந்துவீச்சாளர்களை சமாளிக்கமுடியாமல் திணறியது. இதில் தொடக்க வீரர் குமார் டியோப்ரத் 15 ரன்களிலும், கேப்டன் இஷான் கிஷான் 9 ரன்களிலும், விராட் சிங் 23 ரன்கள் என அடுத்தடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
-
Winning start for @TNCACricket in the #SyedMushtaqAliT20! 👏@DineshKarthik and Co. beat Jharkhand by 6⃣6⃣ runs to bag 4⃣ points. #JHAvTN
— BCCI Domestic (@BCCIdomestic) January 10, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard 👉 https://t.co/JUYuOvqPTc pic.twitter.com/mSBU1MBo5w
">Winning start for @TNCACricket in the #SyedMushtaqAliT20! 👏@DineshKarthik and Co. beat Jharkhand by 6⃣6⃣ runs to bag 4⃣ points. #JHAvTN
— BCCI Domestic (@BCCIdomestic) January 10, 2021
Scorecard 👉 https://t.co/JUYuOvqPTc pic.twitter.com/mSBU1MBo5wWinning start for @TNCACricket in the #SyedMushtaqAliT20! 👏@DineshKarthik and Co. beat Jharkhand by 6⃣6⃣ runs to bag 4⃣ points. #JHAvTN
— BCCI Domestic (@BCCIdomestic) January 10, 2021
Scorecard 👉 https://t.co/JUYuOvqPTc pic.twitter.com/mSBU1MBo5w
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஜார்கண்ட் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தமிழ்நாடு அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதையும் படிங்க: ‘இதற்கு முன்னும் சிட்னியில் இனவெறி சர்ச்சை நடந்துள்ளது’ - அஸ்வின்