இன்று தொடங்கிய டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி திண்டுக்கல் டிராகன்ஸ் அணியுடன் மோதியது.
முதலில் டாஸ் வென்ற சூப்பர் கில்லீஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. ஆரம்பம் முதலே திண்டுக்கல் அணியின் விக்கெட்டுகளை அலேக்சாண்டர் மற்றும் எம்.அஸ்வின் வீழ்த்தினர்.
திண்டுக்கல் அணியின் கேப்டன் ஆர். அஸ்வின் மட்டும் நிலைத்து ஆடி 37 ரன்களை எடுத்தார். 20 ஓவர்களின் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் இழப்பிற்க்கு 115 ரன்களை எடுத்தது.
அதன் பின் 116 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய சூப்பர் கில்லீஸ் அணிக்கு டிராகன்ஸ் அணியின் கௌஷிக் ஆரம்பமே அதிர்ச்சியளித்தார். தான் வீசிய முதல் ஓவரிலேயே கௌஷி காந்தி மற்றும் ஸ்ரீதர் ராஜுவை டக் அவுட் செய்து வெளியேற்றினார்.
தொடர்ந்து வரிசையாக விக்கெட்டுகளை இழந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழ்ந்து 105 ரன்களை மட்டுமே எடுத்தது.
இதன் மூலம் 10 ரன்கள் வித்தியாசத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி தனது வெற்றியை பதிவு செய்தது திண்டுக்கல் டிராகன்ஸ் .
டிராகன்ஸ் அணி சார்பாக சிலம்பரசன் 4 விக்கெட்டுகளையும், கௌஷிக், மொஹமது தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய சிலம்பரசன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.