இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர். இவர் இதுவரை இந்திய அணிக்காக 125 டெஸ்ட், 108 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 35 சதங்களுடன் 13 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
இந்நிலையில் கவாஸ்கர், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைக் கொண்டு தனது ஒருநாள் அணியை உருவாக்கியுள்ளார். அதன்படி இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் விரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் ஹனீஃப் முகமது ஆகியோரை தொடக்க வீரர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.
மேலும், அவரது அணியில் இந்தியா சார்பாக சச்சின் டெண்டுல்கர், கபில்தேவ், குண்டப்பா விஸ்வநாத், சந்திரசேகர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
சுனில் கவாஸ்கர் உருவாக்கிய ஒருங்கிணைந்த இந்தியா - பாகிஸ்தான் அணி: ஹனீஃப் முகமது, விரேந்திர் சேவாக், ஜாகிர் அபாஸ், சச்சின் டெண்டுல்கர், குண்டப்பா விஸ்வநாத், கபில் தேவ், இம்ரான் கான், சயீத் கிர்மானி, வாசிம் அக்ரம், அப்துல் காதிர், சந்திரசேகர்.
இதற்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா, இந்தியா - பாகிஸ்தான் வீரர்களைக் கொண்டு தனது ஒருங்கிணைந்த ஒருநாள் அணியை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரதமரை கேப்டனாக நியமித்து ரமீஸ் ராஜா உருவாக்கிய இந்தியா - பாகிஸ்தான் அணி!