ETV Bharat / sports

மகாராஷ்டிரா தொடரிலிருந்து வெளியேறிய சுமித் நாகல்

author img

By

Published : Feb 4, 2020, 7:43 AM IST

மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்தார்.

Sumit Nagal bows out of Tata Maharashtra Open

மூன்றாவது மகாராஷ்டிரா ஓபன் டென்னிஸ் தொடர் புனேவில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் நட்சத்திர வீரராக வலம்வரும் சுமித் நாகல், செர்பியாவைச் சேர்ந்த விக்டார் டிராய்கியுடன் மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 2-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்த சுமித் நாகல், இரண்டாம் செட் போட்டியில் டை பிரேக்கர் முறையில் 7-6 என்ற கணக்கில் போராடி வெற்றிபெற்றார். இதையடுத்து, ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் கடைசி செட்டில் சுமித் நாகல் 1-6 என்ற கணக்கில் வீழ்ந்தார். இதன்மூலம், 2-6, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் சுமித் நாகல் தோல்வியுற்று தொடரலிருந்து வெளியேறினார்.

கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் முதல் சுற்றில் ஃபெடரருடன் பலப்பரீட்சை நடத்தியதன் மூலம், சுமித் நாகல் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சாஹலின் டிக் டாக்கில் இருக்கும் மூன்றாவது வீரர் யார்?

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.