2011 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில், கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் யுவராஜ் சிங்கின் ஆக்ரோஷமான ஆட்டம் குறித்து சச்சின் தெண்டுல்கர் மனம் திறந்து ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
இது பற்றி சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், இலங்கை இரண்டு விதமான ஆஃப் ஸ்பின்னர்களை பயன்படுத்தினார்கள். இதனால் பேட்டிங்கில் இடது, வலது பார்ட்னர்ஷிப்பை உயிர்ப்புடன் வைத்திருப்பது அர்த்தமுள்ளது என்று உணர்ந்தேன்.
வீரேந்தர் சேவாக், விராத் கோலி ஆகியோர் ஆட்டமிழந்த நிலையில் தோனி களத்துக்கு வந்தார். நான் சேவாக்கிடம், விரூ பால்கனியில் நிற்க வேண்டாம் என்று கூறினேன். வீரர்கள் அறையில் அமர்ந்துக் கொள்ளுங்கள் என்றேன்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின்போது இதேபோன்று சேவாக்கிடம் கூறினேன். அப்போது நான் பிஸியோ மேஜையில் படுத்திருந்தேன். சேவாக் என் அருகில் இருந்தார். பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனுடன் சில யுக்திகள் குறித்து ஆராய்ந்தோம்.
இந்த முடிவு இந்தியா வெற்றிபெறுவதில் பெரும் பங்காற்றியது. இறுதிப் போட்டியில் கம்பீர் சதத்திற்கு மூன்று ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் தோனியுடன் யுவராஜ் சிங் இணைந்தார். இந்த ஜோடி ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்தது. தோனி 79 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். தன்னுடைய அடையாளமான சிக்சரிலேயே அவர் அந்த ஆட்டத்தை முடித்தார்.
![Suggested Dhoni to promote himself during 2011 World Cup Final Sachin Tendulkar MS Dhoni MSD Sachin Tendulkar Dhoni 2011 World Cup Final 2011 உலகக் கோப்பை 2011 உலகக் கோப்பை இந்திய அணி வெற்றி தோனி, யுவராஜ் இணை 2011 உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த சச்சின் தெண்டுல்கர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11_0504newsroom_1586060203_1007.jpg)
கம்பீரின் ஆட்டம் முன்னுதாரணமாக அமைந்தது. அவரின் ஆட்டம் எதிரணியை துரத்தி பிடிக்கும் வாய்ப்பாக அமைந்தது. தோனி ஆட்டத்தை நிறைவு செய்தது புத்திசாலிதனமாக இருந்தது.
யுவராஜூம், தோனியும் களத்தில் நின்று வெற்றியை தேடித் தந்தனர். தோனி அடித்த அந்த சிக்ஸர் அழகுக்கு அழகு சேர்ப்பதாக அமைந்தது” என்றார்.
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி சச்சின் டெண்டுல்கருக்கு இனிய தருணமாக அமைந்தது. ஏனெனில் சச்சினின் 22 ஆண்டுக் கால கிரிக்கெட் வாழ்க்கையில் உலகக் கோப்பையை வெல்லவில்லை என்ற குறை தொடர்ந்தது. அந்தக் குறை 2011 உலகக் கோப்பையோடு நிவர்த்தியானது.
2011 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கை 275 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பவுலிங்கில் மலிங்கா மிரட்டினார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக் (0) மற்றும் சச்சின் டெண்டுல்கர் (18) ஆகியோரை வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப வைத்தவரும் இவரே.
அந்தப் போட்டியில் கம்பீர் நிதானமாக ஆடி 97 ரன்களும், கோலி தன் பங்குக்கு 35 ரன்களும் எடுத்தனர். அடுத்துவந்து அதிரடி காட்டிய தோனி (91), யுவராஜ் (21) இணை இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: 'வாழ்க்கையில் போராட டெண்டுல்கரிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள்'- பிரையன் லாரா