இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூருவின் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியினை மையமாகக்கொண்டு சில இளைஞர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்தத் தகவலின்பேரில் டெல்லி குற்றப்பிரிவு காவல் துறையினர் விரைந்துசென்று சூதாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைதுசெய்தனர்.
அப்போது, அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய 74 செல்போன்கள், இரண்டு தொலைக்காட்சிகள், ஏழு மடிக்கணினிகள் பறிமுதல்செய்யப்பட்டன.
ஐந்து கோடி ரூபாய் அளவுக்கு சூதாட்டம் நடைபெற்றிருப்பதாகவும், மேலும் சூதாட்டத்திற்கு மூளையாக விளங்கியது முசாஃபர் நகரினைச் சேர்ந்த சூதாட்ட மன்னன் அமித் அரோரா எனவும் குற்றப்பிரிவு காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க :மோசமான சாதனையைப் படைத்த ஜோ ரூட்!