வரும் செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியா அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் அடங்கிய தொடருக்காக இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடர் செப்.4ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இத்தொடரில் பங்கேற்கும் 21பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி, தனியார் ஜெட் விமானம் மூலம் இங்கிலாந்து வந்தடைந்துள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித், அந்நாட்டு கிரிக்கெட் வாரிய ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் ‘இங்கிலாந்து அணியுடனான தொடர் எனக்கு சாவலானது’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய ஸ்மித், ‘இங்கிலாந்து அணிக்கெதிரான தொடரில் விளையாடுவதற்கு நான் ஆர்வமாகவுள்ளேன். ஆனால் இத்தொடரில் அங்கு என்னை ஆதரிக்கவும், ஆரவாரப்படுத்தவும் பார்வையாளர்கள் இருக்கப்போவதில்லை. அது எனக்கு மிகப்பெரும் ஒரு சவாலாக இருக்கும் என நினைக்கிறேன்.
இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரை கடந்த சில வருடங்களாக ஒருநாள், டி20 போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அதனால் இந்த தொடர் நிச்சயம் சுவாரஸ்யமான ஒன்றாக அமையும் என நினைக்கிறேன்’ என்று தெரிவித்தார்.
இங்கிலாந்து-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்று டி20, ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் சௌதாம்டன், மான்செஸ்டர், ஓல்ட் டிராஃபோர்ட் ஆகிய நகரங்களில், பார்வையாளர்களின்றி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:யூரோபா லீக்: ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது செவில்லா!