ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தால் அவருக்கு ஒரு வருடம் விளையாட தடைவிதிக்கப்பட்டது. இதையடுத்து நடந்த ஆஷஸ் தொடரில் நான்கு சதங்கள் விளாசி இழந்த மதிப்பை மீட்டெடுத்தார்.
தற்கால டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் ஜாம்பவான் வீரராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராமில் உரையாடினார். அதில் நீங்கள் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்களில் உங்களை மிகவும் சிரமப்படுத்திய வீரர் யார் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த ஸ்டீவ் ஸ்மித், '' பாகிஸ்தானின் முகமது ஆமிர்தான் என்னை அதிக சிரமத்திற்கு உள்ளாக்கியவர். நான் எதிர்கொண்டவர்களிலேயே மிகவும் திறமையான பந்துவீச்சாளர் அவர் தான்'' என்றார்.
இந்தியா அணியின் விராட் கோலி பற்றி கேட்கையில், '' அவர் பேட்டிங்கின் போது ரொம்ப ஃப்ரீக் (Freak)" என்றார்.