இங்கிலாந்து அணியின் இளம் தொடக்க வீரர் சிப்லி மீது, இங்கிலாந்து வீரர்களிலேயே கொஞ்சம் ஃபிட்னஸ் இழந்து காணப்படும் வீரர் என்று சில விமர்சனங்கள் இருந்துவந்தன. ஆனால், அந்த விமர்சனங்களை எல்லாம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் விளாசி துடைத்தெறிந்தார்.
தற்போது லாக்டவுன் நாள்களில் 12 கிலோ எடையைக் குறைத்து ஃபிட்டாக உள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், ''இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக விமானத்தில் பயணம் செய்தபோது ஏதாவது செய்ய வேண்டும் என விரும்பினேன்.
பயிற்சியின்போது பென் ஸ்டோக்ஸ், பட்லர், ரூட் ஆகியோர் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். தங்கள் உடலை மிகவும் ஃபிட்டாக வைக்க தொடர்ந்து பயிற்சிக் கூடங்களில் நேரம் செலவிடுவார்கள். அதைப் பார்த்த பின்புதான் எனக்கும் ஃபிட்டாக வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
நான் ரன் அடிப்பதற்கும் எனது உடலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. ஆனால் ஃபீல்டிங்கில் எனது ஃபிட்னஸ் நிச்சயம் தாக்கம் செலுத்தும். என்னால் இன்னும் வேகமாகச் செயல்பட முடியும். அதனால் லாக்டவுன் நாள்களில் உடற்பயிற்சியைத் தொடங்கினேன். இதுவரை 12 கிலோ எடையைக் குறைத்துள்ளேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்குத் தயாராக உள்ளேன்'' என்றார். இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது.
இதையும் படிங்க: தலைவன் இருக்கிறான் மறக்காதே!