ETV Bharat / sports

#PAKvsSL: குணத்திலக அதிரடியில் இலங்கை அணி- வெற்றி யாருக்கு?

லாகூர்: பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இலங்கை அணி 166 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

#PAKvsSL
author img

By

Published : Oct 5, 2019, 8:57 PM IST

பாகிஸ்தான் நாட்டில் சுற்றுபணம் செய்து வரும் இலங்கை அணி தற்போது டி20 தொடரில் விளையாடவுள்ளது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்டத் தொடர் இன்று லாகூரில் நடைப்பெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

பந்தை பவுண்டரிக்கு அணுப்பிய குணதிலக
பந்தை பவுண்டரிக்கு அணுப்பிய குணதிலக

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அவிஷ்கா ஃபெர்னாண்டோ, தனுஷ்கா குணதிலக ஆகியோர் அதிரடியானத் தொடக்கத்தை தந்தனர். அதிலும் குணதிலக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை சுக்குநூறாக்கினார்.

இதன் மூலம் இலங்கை அணி முதல் ஆறு ஓவர்களுக்குள் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை வெளுத்து வாங்கியது. சிறப்பாக விளையாடிய குணதிலக 33 பந்துகளில் அரை சதமடித்து அசத்தினார்.

அதிரடியாக விளையாடிய குணதிலக 57 ரன்கள் அடித்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதன் பின் களமிறங்கிய பனுஷ்கா ராஜபக்ச அதிரடியாக விளையாடினார். அதன் பின் பந்து வீசிய முகமது ஹொசைன் தனது சிறப்பான பந்து வீச்சினால் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

ஹாட் ட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது ஹொசைன்
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் முகமது ஹொசைன்

இதன் மூலம் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிக பட்சமாக குணதிலக 57 ரன்களும், ஃபெர்னாண்டோ 33 ரன்களும், ராஜபக்ச 32 ரன்களையும் எடுத்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் முகமது ஹொசைன் மூன்று விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதன் பின் 166 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது.

இதையும் படிங்க: #TNPL2019: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விசாரணைக் குழு அறிக்கை!

Intro:Body:

Pak vs SL T20 1st innings

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.