ETV Bharat / sports

டெல்லியை துரத்தும் தோல்விகள்... 88 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஹைதராபாத்...! - டெல்லி - ஹைதராபாத்

துபாய்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

srh won by 88 runs against dc
srh won by 88 runs against dc
author img

By

Published : Oct 27, 2020, 11:00 PM IST

டெல்லி - ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணி டெல்லி அணியின் பந்துவீச்சை அதிரடியாக எதிர்கொண்டு 220 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதன்பின்னர் டெல்லி அணிக்கு தவான் - ரஹானே இணை தொடக்கம் கொடுத்தது. ஆனால் முதல் ஓவரிலேயே டெல்லி அணிக்கு ஹைதராபாத் அணி அதிர்ச்சி கொடுத்தது. ஷிகர் தவான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே கேப்டன் வார்னரிடம் கேட்ச் கொடுக்க, டெல்லி அணி ரசிகர்கள் தலையில் கையை வைத்தனர். பின்னர் டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சி கொடுக்கும் விதமாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார்.

3 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷீத் கான்
3 விக்கெட்டுகள் வீழ்த்திய ரஷீத் கான்

ஆனால் ஸ்டாய்னிஸ் விக்கெட்டை வீழ்த்தி அதே அதிர்ச்சியை ஹைதராபாத் அணி டெல்லிக்கு கொடுத்தது. இதன் பின்னாலாவது கேப்டன் இன்னிங்ஸை பார்க்கலாம் என நினைத்தால், ஹெட்மயரை டெல்லி அணி களமிறக்கியது. ரஹானேவுடன் இணைந்த ஹெட்மயர் பவுண்டரிகளை விளாசினார்.

இதனால் பவர் ப்ளே ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 54 ரன்களை எடுத்தது. பின்னர் ஹைதராபாத் அணியின் ரஷீத் கான் வீசிய 7ஆவது ஓவரில் ஹெட்மயர் 16 ரன்களிலும், ரஹானே 26 ரன்களிலும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் முக்கிய வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் - ரிஷப் பந்த் களத்திற்கு வந்தனர்.

சந்தீப் ஷர்மா
சந்தீப் ஷர்மா

ராஜஸ்தான் அணிக்காக பென் ஸ்டோக்ஸ் போல் ஸ்ரேயாஸ் ஐயர் ஆடுவார் என எதிர்பார்த்த நிலையில், 12ஆவது ஓவரின் போது விஜய் சங்கர் பந்தில் 7 ரன்களில் வெளியேற, டெல்லி அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது.

பின்னர் வந்த அக்சர் படேல் 1 ரன்னில் ஆட்டமிழக்க, 13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் ஒருமுனையில் ரிஷப் பந்த் பவுண்டரிகள் விளாசுவதற்காக போராடிக் கொண்டே இருந்தார்.

36 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்
36 ரன்கள் எடுத்த ரிஷப் பந்த்

பின்னர் அவரும் 35 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, 16.1 ஓவர்களுக்கு டெல்லி அணி 8 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்களை எடுத்திருந்தது. பின்னர் அஸ்வின் - துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் பவுண்டரிகளாக விளாச, 18 ஓவரின் முடிவில் அஸ்வினும் ஆட்டமிழந்தார். இறுதியாக டெல்லி அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதையும் படிங்க: ஆஸ்திரேலிய கிரிக்கெட் தொடர்: ரோஹித் சர்மா நீக்கம் குறித்து வெளிப்படைதன்மை வேண்டும்- கவாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.