பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் முன்னதாக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப். 4) ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணிகளும் நேற்று (பிப். 3) மைதானத்தில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தன.
மேலும் பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக மைதானம் முழுவதும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதனால் ராணுவப் பாதுகாப்புடன் இரு அணிகளும் தங்களது பயிற்சிகளை மேற்கொண்டன. மேலும் இப்போட்டியை பாகிஸ்தான் அணி டிரா செய்தோ அல்லது வெல்லும்பட்சத்திலோ 18 ஆண்டுகளுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்க அணிக்கெதிராக டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இதன் காரணமாக இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஐஎஸ்எல்: ஈஸ்ட் பெங்காலைப் பந்தாடிய பெங்களூரு எஃப்சி