ETV Bharat / sports

எனது பயோபிக் படத்திற்கு கல்லி பாய் நடிகர் சரியாக இருப்பார்! - Yuvraj Singh Biopic

என்னைப் பற்றி பாலிவுட் சினிமாவில் பயோ பிக்கில் தயாரானால் அதில் நடிக்க சித்தாந்த் சதுர்வேதி சரியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

siddhant-chaturvedi-good-option-to-portray-me-yuvraj

author img

By

Published : Mar 26, 2020, 3:15 PM IST

2007, 2011 ஆகிய இரு ஆண்டுகளில் நடந்த டி20 உலகக்கோப்பை, ஒருநாள் உலகக்கோப்பைத் தொடர்களில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு யுவராஜ் சிங் மிக முக்கியக் காரணமாக விளங்கினார்.

அதையடுத்து புற்றுநோயால் பாதிக்கப்பட்ட யுவராஜ், அதிலிருந்து மீண்டுவந்து தனது கிரிக்கெட்டைத் தொடங்கினார். இரண்டாவது இன்னிங்சில் சரியாக சோபிக்காத யுவராஜ், கடந்தாண்டு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வை அறிவித்தார்.

இதனிடையே யுவராஜ் சிங் பற்றி பயோ பிக்கை எடுக்க பாலிவுட் சினிமா இயக்குநர்கள் சிலர் சிந்தித்துவருகின்றனர். இதனிடையே யுவராஜ் சிங்கிடம், உங்களைப் பற்றிய பயோ பிக் படமாக்கப்பட்டால் யார் ஹீரோவாக நடிக்க வேண்டும் எனக் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு, ''அது இயக்குநரின் விருப்பம்தான். என்னிடம் கேட்டால் கல்லி பாய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சித்தாந்த் சதுர்வேதி சரியாக இருப்பார் என நினைக்கிறேன். அவரது படங்களை இப்போது விரும்பிப் பார்க்கிறேன்'' என்றார்.

இதையும் படிங்க: மிஸ் யூ ஜெர்சி நம்பர் 12!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.