ETV Bharat / sports

‘இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் சுப்மன் கில்’ - ரோகித் சர்மா! - ரோஹித் சர்மா

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் என்று தெரிவித்துள்ளார்.

Shubman Gill is future of Indian cricket: Rohit Sharma

author img

By

Published : Apr 24, 2020, 11:58 AM IST

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இருவரும், இன்ஸ்டாகிராம் நேரலையின் மூலம் நேர்காணல் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர்.

இந்நிகழ்ச்சியின்போது, நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக சுப்மன் கில்லை ஏன் களமிறக்கவில்லை என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ரோகித் சர்மா, "என்னைப் பொறுத்தவரையில் சுப்மன் கில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவர் இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலமும்கூட. மேலும் அவர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்.

அவர் நியூசிலாந்து அணியுடனான தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தாலும், அவரைக் களமிறக்கவில்லை. ஏனெனில் ப்ரித்வி ஷாவும் அப்போதுதான் அணிக்கு மீண்டும் திரும்பினார். அதனால் அணியில் யார் இடம்பெறுவார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. அதில் பயிற்சியாளர், கேப்டன் இருவரும் ப்ரித்வி ஷாவுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.

விராட் கோலி மற்றும் சுப்மன் கில்
விராட் கோலி, சுப்மன் கில்

மேலும் ஹர்பஜன் சிங் கூறுகையில், "ரோகித் கூறியதே சரி. ஏனெனில் அப்போதுதான் ப்ரித்வி ஷாவும் அணிக்குத் திரும்பியிருந்தார். ஆனால் அவர் அத்தொடரில் சிறப்பாகச் செயல்படவில்லை. அப்போது அணியில் சிலர் சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு வழங்கலாம் எனக் கூறியுள்ளனர்.

நானும் கில்லிற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றே நினைத்தேன். இருப்பினும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனால் அது நிரந்தரமல்ல, இனி வருங்காலங்களில் அவரும் இந்திய அணியில் இடம்பிடிப்பார்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:தற்போதைக்கு இந்தியாவில் கிரிக்கெட் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை - சவுரவ் கங்குலி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.