பெங்களூருவில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. இதனிடையே ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தபோது ஃபீல்டிங்கில் ஈடுபட்ட இந்திய வீரர் ஷகர் தவானின் இடது கை தோள் பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவருக்கு பதிலாக சாஹல் மாற்று வீரராக களமிறங்கினார். இதையடுத்து, ஸ்கேன் எடுத்து பார்க்கையில் தவானுக்கு ஏற்பட்ட காயம் உறுதியானது. இதன் விளைவாக, ஷிகர் தவானுக்கு பதில் கே.எல். ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார்.
வரும் 24ஆம் தேதி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக ஷிகர் தவான் அணியிலிருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அவருக்கு பதில் மாற்று வீரராக யார் அணியில் சேர்க்கப்படுவார் என்பதை பிசிசிஐ இன்னும் அறிவிக்கவில்லை.
கடந்த எட்டு மாதங்களில் ஷிகர் தவான் காயம் காரணமாக அணியிலிருந்து விலகுவது இது மூன்றாவது முறையாகும்.
- உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் கட்டை விரலில் காயம் ஏற்பட்டது
- சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கணுக்காலில் காயம் ஏற்பட்டதற்கு அவருக்கு 27 தையல்கள் போடப்பட்டன
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்திய அணிக்காக இதுவரை 34 டெஸ்ட், 136 ஒருநாள், 60 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார்.
இதையும் படிங்க:5 டக்... எக்ஸ்டராஸ்தான் டாப் ஸ்கோர்... ஜப்பானை பரிபாதபமாக்கிய இந்தியா!