ETV Bharat / sports

#மீண்டும்_சாஸ்திரி: கடந்த கால நிகழ்வுகள் ஓர் அலசல்! - fans

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள ரவி சாஸ்திரியின் தலைமையின் கீழ் இந்திய அணி செய்த சாதனைகளின் சிறுதொகுப்பு.

ravi shastri
author img

By

Published : Aug 16, 2019, 9:21 PM IST

நிர்வாகியாக ரவி சாஸ்திரி...

  • இந்திய அணிக்கு 2014-2016ஆம் ஆண்டுகளுக்கான தலைமை நிர்வாகியாக பிசிசிஐயினால் நியமிக்கப்பட்டவர் ரவி சாஸ்திரி. ஆனால் மறைமுகமாக அணியின் பயிற்சியாளராகவும் அவர் செயல்பட்டார்.
  • அந்த காலகட்டத்தில் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது.
  • அதைத்தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியுடன் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
  • மீண்டும் இந்திய அணியில் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்த கேள்விகள் எழுந்ததால் 2016ஆம் ஆண்டு, இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் அனில் கும்ப்ளேவை பிசிசிஐ நியமித்தது.
    முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ளே
    முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே
  • அதன்பின், அணியின் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் கும்ப்ளே இடையிலான மோதல் காரணமாக 2017ஆம் ஆண்டு சச்சின், கங்குலி, விவிஎஸ் லக்‌ஷ்மன் ஆகிய மூவர் தலைமையிலான குழு இந்திய அணியின் பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் என அறிவிக்கப்பட்டது.

பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில்...

  • அதன்பின், கேப்டன் விராட் கோலியின் பரிந்துரையின் பேரில், 2017ஆம் ஆண்டு ரவி சாஸ்திரியை இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அந்த அறிவிப்பில் ரவி சாஸ்திரி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டி வரை தலைமை பயிற்சியாளராக செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டது.
    கோலி மற்றும் ரவி சாஸ்திரி
    கோலி மற்றும் ரவி சாஸ்திரி
  • 2017ஆம் ஆண்டு முதல் ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி 21 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 போட்டிகளில் வெற்றியும், 7 போட்டிகளில் தோல்வியையும், மூன்று போட்டிகள் சமனிலும் முடிந்துள்ளது.
  • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தமட்டில் 63 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 45 போட்டிகளில் வெற்றியையும், 15 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
  • 37 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய இந்திய அணி 25 போட்டிகளில் வெற்றியும், 11 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது.
  • பயிற்சியாளராக இவர் இருந்தபோது, இந்திய அணி வெற்றி பெற்ற தொடர்கள் இவரால் தான் வெற்றி பெற்றது என்பது போன்ற சலசலப்புகளும் எழத்தொடங்கின.

சாஸ்திரியும்; சர்ச்சைகளும்!

  • அதன்பின், அணி வீரர்கள் தேர்வு, அணியின் பேட்டிங் நிலை குறித்த விமர்சனங்கள், 4ஆவது வரிசையில் களமிறங்குவது யார்? என்ற பல கேள்விகள் அணியில் சலசலப்பு உள்ளது என்பதைத் தெளிவுபடுத்தியது.
    ரவி சாஸ்திரி, கோலி செய்தியாளர் சந்திப்பு

  • அதில் மிக முக்கியமாக பேட்டிங்கில் நான்காம் வரிசையில் யார் களமிறங்குவது என்ற தீர்வு இல்லாமல் பல வீரர்களுக்கு வாய்பளிக்கப்பட்டது. ஆனாலும் வீரர்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற கருத்தும் நிலவியது.
  • இப்படி அணியில் வீரர்களை மாற்றிக் கொண்டிருந்த சாஸ்திரி மீது இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கங்குலி, ஹர்பஜன் சிங், சேவக் போன்றவர்கள் தங்களது விமர்சனங்களை முன்வைத்தனர்.
  • அதன்பின் 2019ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதற்கான காரணமாக அணி வீரர்கள் களமிறக்கப்படும் வரிசையில் பயிற்சியாளர் ஒருதலைபட்சமாக இருந்தார் என்ற கேள்வி இனையத்தில் வைரலானது.
  • அதைத்தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், விராட் கோலியும் ரவிசாஸ்திரியும் அணி வீரர்கள் குறித்து கூறிய கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் பெறும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
    இந்திய அணி
    இந்திய அணி
  • பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் ஆரம்பித்ததால் ரவி சாஸ்திரியின் பயிற்சி காலம் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இதனிடையே விராட் கோலி, ரோகித் சர்மா இடையிலான மோதலும் அணியில் வீரர்களிடையே விரிசல் உள்ளது என்பதை தெளிவுபடுத்தியது.
  • கபில் தேவ் தலைமையிலான குழு தற்போது மீண்டும் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் விமர்சனங்கள் எழத்தொடங்கியுள்ளன.
    ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்
    ரவி சாஸ்திரி மீண்டும் நியமனம்
  • ஏனெனில், இவரின் பயிற்சியாளர் பொறுப்பின் போது இந்திய அணி இரண்டு டி20 உலகக்கோப்பை, இரண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இழந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் மீண்டும் ரவி சாஸ்திரி, விராட் கோலி தலைமையிலான இந்திய அணி என்ன செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Intro:Body:

ravi shastri

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.