டி/எல் விதிமுறைப்படி தென் ஆப்பிரிக்கா அணி அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது என்றால், சூப்பர் ஓவர் விதிமுறைகளால் நியூசிலாந்து அணி அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளது. இதுவரை 8 சூப்பர் ஓவர்களில் ஆடியுள்ள நியூசிலாந்து அணி, 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.
இந்நிலையில் சூப்பர் ஓவர் விதிமுறைகள் ஒருநாள் போட்டிகளுக்குத் தேவையில்லை என நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ''ஒருநாள் போட்டிகளுக்கு சூப்பர் ஓவர் விதிமுறை தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் 100 ஓவர்கள் வீசப்படும் ஒருநாள் போட்டிகளில் வெற்றியாளரைத் தேர்வுசெய்ய முடியாமல், ஆட்டம் டிராவில் முடிந்தால் அதனை டிரா என்று ஏற்றுக்கொள்வதில் என்ன தவறு உள்ளது எனத் தெரியவில்லை.
டி20 போட்டிகளுக்கு சூப்பர் ஓவர் மூலம் வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு அவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலகக்கோப்பைத் தொடரின் இறுதி ஆட்டத்தில் போட்டி டிராவில் முடிந்த உடன், நான் நேராக நடுவரிடம் சென்று நல்ல ஆட்டம் என வாழ்த்து கூறினேன். சூப்பர் ஓவர் இருக்கிறது என்று அப்போது எனக்குத் தெரியாது.
என்னைப் பொறுத்தவரையில் ஒருநாள் போட்டி டிராவில் முடிந்தால் டிரா என்றே கணக்கிட வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: இதே நாள், 1983: உலகக்கோப்பை சரித்திரத்தை மாற்றிய கபில் தேவ் அணி!