வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரும் முன்னாள் கேப்டனுமான ஷாகிப் அல் ஹசன், கடந்த மாதம் ஐசிசியின் விதிகளை மீறிய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைசெய்யப்பட்டிருந்தார்.
இதன் காரணமாக இவர் இந்திய அணியுடனான தொடரில்கூட விளையாட முடியாத நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஷாகிப் தற்போது வங்கதேசத்தில் உள்ளூர் கால்பந்து கிளப்பான ஃபுட்டி ஹக்ஸ் அணிக்காக விளையாடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபுட்டி ஹாக்ஸ் அணி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில், ஷாகிப் அல் ஹசன், ஃபுட்டி ஹாக்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இத்தகவலை உறுதிப்படுத்தியது.
இதையும் படிங்க: ஐ.எஸ்.எல். கால்பந்து: மீண்டும் சொந்த ஊரில் சொதப்பிய மும்பை எஃப்.சி.