2008ஆம் ஆண்டு கோலகலமாக தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் டி20 தொடர், சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, டெக்கான், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய எட்டு அணிகளைக் கொண்டு தொடங்கப்பட்டது. இத்தொடரின் முதல் போட்டியில் சவுரவ் கங்குலி தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டிராவிட் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் மோதினர்.
இதில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ராகுல் டிராவிட் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். அதனையடுத்து கேகேஆர் அணிக்காக கேப்டன் சவுரவ் கங்குலி, பிராண்டன் மெக்குலம் களமிறங்கினர். தொடக்கத்திலிருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை 5.2 ஓவர்களிலேயே 61 ரன்களை சேர்த்து அதிரடியில் மிரட்டியது. பின்னர் கங்குலி பத்து ரன்களில் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் பந்துவீச்சாளர்களின் மீது துளியும் கருணை காட்டாமல் மெக்குலம் அதிரடியில் பின்னி எடுத்தார்.
இதன்மூலம் 16 ஓவரின் தொடக்கத்தில் சதமடித்து அரங்கத்தையே அதிரச்செய்தார். அதன் பிறகும் நிற்காமல் அடுத்த நான்கு ஓவர்களில் 56 ரன்களை விளாசி தனது 150 ரன்களையும் கடந்தார். இதனால் கேகேஆர் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 222 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 82 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம் கேகேஆர் அணி ஐபிஎல் தொடரில் முதல் போட்டியிலேயே 140 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றதினால் ஒட்டு மொத்த உலக ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தது.
கிட்டத்திட்ட 12 வருடங்கள் கடந்த விட்ட நிலையிலும் மெக்குலமின் அந்த வெறித்தனமான ஆட்டம், அவரை ரசிகர்களின் மனதில் ஆழப்பதியச்செய்துள்ளது. இதுகுறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெளியிட்டுள்ள காணொலில் பேசிய மெக்குலம்,
-
Here's a sneak peek into @Bazmccullum's special episode of #KnightsUnplugged! 🤩💜
— KolkataKnightRiders (@KKRiders) April 18, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tune in tonight on https://t.co/8znUvtVNcF at 9 PM for the Full EPISODE! 😉#TheUnforgettableKnight #KorboLorboJeetbo #KKR #Cricket #Saturday pic.twitter.com/9IhpxWrTgM
">Here's a sneak peek into @Bazmccullum's special episode of #KnightsUnplugged! 🤩💜
— KolkataKnightRiders (@KKRiders) April 18, 2020
Tune in tonight on https://t.co/8znUvtVNcF at 9 PM for the Full EPISODE! 😉#TheUnforgettableKnight #KorboLorboJeetbo #KKR #Cricket #Saturday pic.twitter.com/9IhpxWrTgMHere's a sneak peek into @Bazmccullum's special episode of #KnightsUnplugged! 🤩💜
— KolkataKnightRiders (@KKRiders) April 18, 2020
Tune in tonight on https://t.co/8znUvtVNcF at 9 PM for the Full EPISODE! 😉#TheUnforgettableKnight #KorboLorboJeetbo #KKR #Cricket #Saturday pic.twitter.com/9IhpxWrTgM
“அந்த ஒருநாள் இரவு எனது வாழ்க்கையையே மொத்தமாக திருப்பி போட்டது. அந்தப்போட்டியில் என்னுடைய அதிர்ஷ்டத்தின் வாயிலாகவே என்னால் அதனை சாதிக்க முடிந்தது. ஆனால் உண்மையில் நான் எப்படி அதனைச் செய்தேன் என எனக்கு தெரியாது, இருந்தாலும் என் மொத்த வாழ்க்கையையும் மாற்றிய தருணமது என்பது மட்டும் உறுதி” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தோனிக்கு இடம் கிடைப்பது கடினம் - முகமது அசாருதின்