ETV Bharat / sports

டி20 தொடரைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்த இங்கிலாந்து!

author img

By

Published : Feb 16, 2020, 11:32 PM IST

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம், டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது.

SAvENG: England won by 5 wkts and Won the series by 2-1

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்காவும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றதால் இன்று நடந்த மூன்றாவது போட்டிக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டி காக் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக் - பவுமா இணை அதிரடியாக ஆடியது. முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவர்களில் 84 ரன்கள் சேர்த்த நிலையில், டி காக் 34 ரன்களிலும் பவுமா 49 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து வந்த வாண்டர் டூசன் 11 ரன்களில் வெளியேற, கிளாஸன் - மில்லர் இணை இங்கிலாந்து பந்துவீச்சை அனைத்து திசைகளுக்கும் பறக்கவிட்டது.

பவுமா
பவுமா

அதிரடியாக ஆடிய கிளாஸன் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் இறுதி நேரத்தில் அதிரடியாக ஆடிய மில்லர் 20 பந்துகளில் 35 ரன்கள் எடுக்க, 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 223 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜேசன் ராய் 7 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜோடி சேர்ந்த பட்லர் - பெயர்ஸ்டோவ் இணை தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை அசாத்தியமாக எதிர்கொண்டது. இந்த இணையின் அதிரடியான ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்தது. பட்லர் 23 பந்துகளில் அரைசதத்தை கடந்து அசத்தினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 91 ரன்கள் சேர்த்த நிலையில் பட்லர் 29 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பெயர்ஸ்டோவ்
அரைசதம் அடித்த பெயர்ஸ்டோவ்

மறுமுனையில் அதிரடியாக ஆடிய பெயர்ஸ்டோவ் 27 பந்துகளில் அரைசதம் கடக்க, நான்காவது வீரராக வந்த மாலன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து பெயர்ஸ்டோவ் 34 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்ப, அடுத்த ஓவரிலேயே மாலன் 11 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் மோர்கன் தொடர்ந்து சிக்சர்களாக விளாச, இங்கிலாந்து அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. 21 பந்துகளில் 7 சிக்சர்களை விளாசி மோர்கன் அரைசதம் கடந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி 19.1 ஓவர்களில் 226 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தியது.

ஆட்டநாயகன் மோர்கன்
ஆட்டநாயகன் மோர்கன்

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது. மேலும் டி20 போட்டிகளில் சேஸ் செய்த இரண்டாவது வெற்றிகரமான ஸ்கோர் என்ற புதிய சாதனையை இங்கிலாந்து அணி படைத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காத மோர்கன் 22 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

இதையும் படிங்க: மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: ஹர்மன்ப்ரீத் கவுர் கடந்து வந்த பாதை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.