அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் அடங்கிய டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் இந்தத் தொடருக்கான இந்திய அணி நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ரிஷப் பந்த் மீண்டும் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவ வீரருமான மகேந்திர சிங் தோனிக்கு இந்தத் தொடரிலும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம்பெற்றிருந்த சஞ்சு சாம்சன் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் வங்கதேச அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் களமிறக்கப்படவில்லை. அந்தத் தொடரில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் சரியாக விளையாடவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரிஷப் பந்திற்கு பதிலாக சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான அணியில் ரிஷப் பன்ந் தவிர வேறு எந்த விக்கெட் கீப்பரும் இடம்பெறவில்லை. எனவே வாய்ப்பே அளிக்காமல் சஞ்சு சாம்சானை அணியிலிருந்து ஏன் நீக்கம் செய்தீர்கள் என்று ட்விட்டரில் ரசிகர்கள் சிலர் பதிவிட்டுள்ளனர்.
-
Hard on Sanju Samson but I guess he is much better off playing games rather than just travelling around. Big vote of confidence in Rishabh Pant but the team will expect more from him.
— Harsha Bhogle (@bhogleharsha) November 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Hard on Sanju Samson but I guess he is much better off playing games rather than just travelling around. Big vote of confidence in Rishabh Pant but the team will expect more from him.
— Harsha Bhogle (@bhogleharsha) November 21, 2019Hard on Sanju Samson but I guess he is much better off playing games rather than just travelling around. Big vote of confidence in Rishabh Pant but the team will expect more from him.
— Harsha Bhogle (@bhogleharsha) November 21, 2019
இதுகுறித்து கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்சா போக்லே தனது ட்விட்டர் பக்கத்தில், “சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டது மிகவும் கடினமான ஒன்று. ரிஷப் பன்ந் மீது அணி நிர்வாகம் அதிக நம்பிக்கையை வைத்துள்ளது.” எனப் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையிலையில் சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் ஒற்றை ஸ்மைலியை(laughter emoji) பதிவிட்டிருந்தார். இதை கண்ட ரசிகர்கள் இந்திய கிரிக்கெட் தேர்வாளர்களை கடுமையாக சாடி பதிவுகளை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
-
😊
— Sanju Samson (@IamSanjuSamson) November 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">😊
— Sanju Samson (@IamSanjuSamson) November 22, 2019😊
— Sanju Samson (@IamSanjuSamson) November 22, 2019
இதையும் படிங்க: பாகுபாடின்றி வங்கதேச வீரருக்கு உதவி செய்த இந்திய மருத்துவர்!