இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று போட்டிகள் அடங்கிய ஒருநாள், டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தத் தொடரில் பங்கேற்கும் கோலி தலைமையிலான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்குழு கடந்த வாரம் (நவம்பர் 21) அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், பெரிதும் எதிர்பார்த்த சஞ்சு சாம்சனின் பெயர் இடம்பெறாதது குறித்து இந்திய ரசிகர்கள் இந்திய வீரர் ஹர்பஜன் சிங், வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே உள்ளிட்ட பலரும் சமூகவலைதளங்களில் இந்திய தேர்வுக்குழுவினரை விமர்சித்து வந்தனர்.
முன்னதாக நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் அவர் சேர்க்கப்பட்டாலும், அவருக்கு ஒரு போட்டியில் கூட விளையாடும் வாய்ப்பு அமையவில்லை என்பது அதற்கு முக்கிய காரணம். தான் அணியில் இடம்பெறாதது குறித்து சஞ்சு சாம்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு ஸ்மைலியை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்தத் தொடரில் இடம்பெற்றிருந்த இடதுகை ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் காயம் காரணமாக தற்போது விலகியுள்ளார். சையத் முஷ்டாக் அலி டி20 தொடரின் போது தனது இடது முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்கு ஷிகர் தவான் சிகிச்சை எடுத்துகொண்டு ஓய்வில் இருக்கிறார். இதனால் அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் இந்தத் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
-
NEWS : @IamSanjuSamson named as replacement for injured Dhawan for the T20I series against West Indies.
— BCCI (@BCCI) November 27, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Wriddhiman Saha undergoes surgery.
More details here - https://t.co/V5fixR8uoH pic.twitter.com/oBsaxVXWAz
">NEWS : @IamSanjuSamson named as replacement for injured Dhawan for the T20I series against West Indies.
— BCCI (@BCCI) November 27, 2019
Wriddhiman Saha undergoes surgery.
More details here - https://t.co/V5fixR8uoH pic.twitter.com/oBsaxVXWAzNEWS : @IamSanjuSamson named as replacement for injured Dhawan for the T20I series against West Indies.
— BCCI (@BCCI) November 27, 2019
Wriddhiman Saha undergoes surgery.
More details here - https://t.co/V5fixR8uoH pic.twitter.com/oBsaxVXWAz
இந்தத் தொடரிலாவது சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்குமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி ஹைதராபாத்தில் டிசம்பர் 6ஆம் தேதி தொடங்கவுள்ளது. நடைபெற்றுவரும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் கேரள அணிக்காக விளையாடிய சஞ்சு சாம்சன் 112 ரன்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.