பாகிஸ்தான் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக திகழ்பவர் சோயிப் மாலிக். 1999ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அணிக்காக விளையாடி வரும் இவர், இதுவரை 35 டெஸ்ட், 287 ஒருநாள், 116 டி20 போட்டிகளில் விளையாடி 11ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களையும், 200க்கு மேற்பட்ட விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தானில் நடைபெற்று வரும் உள்ளூர் டி20 தொடர்னா நேஷனல் டி20 கோப்பை தொடரில் விளையாடிவருகிறார். இத்தொடரில் நேற்று நாடைபெற்ற போட்டியில் சோயிப் மாலிக், 44 பந்துகளில் 77 ரன்களை குவித்திருந்தார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் 10ஆயிரம் ரன்களை கடந்த முதல் ஆசிய வீரர் என்ற பெருமையை சோயிப் மாலிக் பெற்றார். மேலும் சர்வதேச அளவில் 10ஆயிரன் டி20 ரன்களை கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையையும் பெற்றது. முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில், கிரன் பொல்லார்ட் ஆகியோர் டி20 போட்டிகளில் 10ஆயிரம் ரன்களை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சோயிப் மாலிக்கின் சாதனையை பாராட்டும் வகையில், அவரது மனைவியும், இந்திய டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்ஸா ட்விட்டர் பக்கத்தில் தமது வாழ்த்துகளைத் தேரிவித்துள்ளார்.
-
👏🏽💪🏽 Longevity ,patience ,hard work ,sacrifice and belief @realshoaibmalik ❤️ so proud 🙌🏽 https://t.co/XpOsPqpzXy
— Sania Mirza (@MirzaSania) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">👏🏽💪🏽 Longevity ,patience ,hard work ,sacrifice and belief @realshoaibmalik ❤️ so proud 🙌🏽 https://t.co/XpOsPqpzXy
— Sania Mirza (@MirzaSania) October 10, 2020👏🏽💪🏽 Longevity ,patience ,hard work ,sacrifice and belief @realshoaibmalik ❤️ so proud 🙌🏽 https://t.co/XpOsPqpzXy
— Sania Mirza (@MirzaSania) October 10, 2020
சானியாவின் ட்விட்டர் பதிவில், “உங்களது அனுபவம், பொறுமை, விடாமுயற்சி, கடின உழைப்பு, தியாகம், நம்பிக்கையை கண்டு நான் பெருமையடைகிறேன் சோயிப் மாலிக்” என்று பதிவிட்டுள்ளார். இவரின் ட்விட்டர் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: மீண்டும் திவேத்தியா மேஜிக் - ராஜஸ்தான் த்ரில் வெற்றி!