ETV Bharat / sports

பத்தாண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்கிறார் சங்ககாரா! - பத்து ஆண்டுகளுக்கு பிறகு

எம்சிசியின் தலைவர் குமார் சங்ககாரா பாகிஸ்தானுக்கு எம்சிசியின் கிரிக்கெட் அணிகளை அனுப்புவதற்கான முடிவுகள் பற்றி ஆலோசிக்க பத்தாண்டுக்குப் பிறகு அந்நாட்டுக்குச் செல்லவுள்ளார்.

Pakistan again
author img

By

Published : Oct 22, 2019, 4:21 PM IST

இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய எம்சிசியின் (MARYLEBONE CRICKET CLUB) தலைவருமானவர் குமார் சங்ககாரா. இவர் 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணியுடனான தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணியுடன் பாகிஸ்தான் சென்றிருந்தார்.

அப்போது காடிஃப் மைதானத்திற்குச் செல்லும் வழியில் இலங்கை அணி சென்ற பேருந்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தச் சம்பவத்தில் சங்ககாரா உள்பட இலங்கை அணியைச் சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்தனர். அதன் பின் பாகிஸ்தானில் சர்வதேச போட்டிகளை நடத்த ஐசிசி தடைவிதித்தது.

2009ஆண்டு இலங்கை அணி மீதான  தீவிரவாத தாக்குதலின் போது
2009ஆண்டு இலங்கை அணி மீதான பயங்கரவாதத் தாக்குதலின்போது

இந்நிலையில் பத்தாண்டுக்குப் பிறகு கடந்த மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சிகளால் இலங்கை அணியுடனான தொடர் பாகிஸ்தானில் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து எம்சிசியின் அணிகளுக்கு இடையேயான போட்டிகளை பாகிஸ்தானில் நடத்த எம்சிசி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதற்காக எம்சிசியின் தலைவரான குமார் சங்ககாரா தனது குழுவினரோடு பத்தாண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் செல்லவுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் பாகிஸ்தான் செல்வது உண்மைதான். ஆனால் அதற்கான வேலை இன்னும் வரவில்லை. அப்படி வரும் பட்சத்தில் நான் கண்டிப்பாக எம்சிசி அணியுடன் பாகிஸ்தானுக்குச் செல்வேன் எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: சங்ககாராவுக்கு அடித்த யோகம்.. இவர்தான் ஃபர்ஸ்ட்!

Intro:Body:

.BCCI out as ICC forms new working group

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.