ETV Bharat / sports

இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாகும் சிஎஸ்கே வீரர் - Sam Billings

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக இளம் வீரர் சாம் பில்லிங்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Sam Billings
author img

By

Published : Oct 25, 2019, 8:34 PM IST

இங்கிலாந்து அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெறுகிறது.

இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் துணைக் கேப்டனாக இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது. சாம் பில்லிங்ஸ் கடைசியாக இந்தாண்டு மார்ச் மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 போட்டியில் பங்கேற்றார். அதன்பின் அவருக்கு காயம் ஏற்பட்டதால் பில்லிங்ஸ் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க முடியாமல் போனது.

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான சாம் பில்லிங்ஸ் 21 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 314 ரன்களை எடுத்துள்ளார். இவர் ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியிருக்கிறார்.

இந்த சூழலில் இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்குப்பின் நியூசிலாந்து சென்று விளையாடுகிறது. இந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் பெரும்பாலும் இளம் வீரர்களே இடம்பிடித்துள்ளனர். எனவே அணியை வழிநடத்த கேப்டன் இயான் மார்க்கனிடம் பயிற்சிபெறுவதற்காக சாம் பில்லிங்ஸிற்கு துணைக் கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இந்த புதிய வாய்ப்பு ஒரு அங்கீகாரத்தையும் மிகப்பெரிய கௌரவத்தையும் தனக்கு அளிப்பதாக சாம் பில்லிங்ஸ் தெரிவித்துள்ளார்.

Sam Billings
கேன் வில்லியம்சன்

இதே வேளையில் இந்த டி20 தொடரில் காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக அந்த அணியை டிம் சவுதி வழிநடத்தவுள்ளார். உலகக்கோப்பை தொடருக்குப்பின் இவ்விரு அணிகளும் தற்போது நேரடியாக சந்திக்கவுள்ளதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

டி20 தொடருக்கான அணி விபரம்

இங்கிலாந்து: இயான் மார்கன் (கேப்டன்), பெர்ஸ்டோவ், டாம் பேண்டன், சாம் பில்லிங்ஸ், பேட் ப்ரவுன், சாம் குர்ரான், டாம் குர்ரான், ஜோ டென்லி, லீவிஸ் கிரிகோரி, கிறிஸ் ஜோர்டான், சகிப் மஹ்மூத், தவித் மாலன், மேட் பார்க்கின்சன், அடில் ரஷித், ஜேம்ஸ் வின்ஸ்

நியூசிலாந்து: டிம் சவுதி (கேப்டன்), ட்ரெண்ட் போல்ட் (கடைசி இரண்டு போட்டிகளுக்கு மட்டும்), ராஸ் டெய்லர், கேலின் டி கிராண்ட்ஹோம், பெர்குசன் (முதல் இரண்டு போட்டிகளுக்கு மட்டும்), கப்தில், ஸ்காட் குஜல்ஜெய்ன், டேரில் மிட்சல், கோலின் மன்ரோ, ஜிம்மி நீஷம், மிட்சல் சாண்ட்னர், டிம் செய்பெர்ட், இஷ் சோதி, ப்ளேர் டிக்னர்

Intro:Body:

Sam Billings named England vice-captain for NZ T20Is

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.