பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென் ஆப்பிரிக்க அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 26ஆம் தேதி கராச்சியில் நடைபெற்றது.
இப்போட்டியில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவு செய்தது. இதையடுத்து நேற்று (ஜன.29) செய்தியாளர்களைச் சந்தித்த தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டி காக், நாங்கள் அடுத்த போட்டியில் வலுவான நிலையில் மீண்டு வருவோம் என தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய டி காக், “பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே எங்களுடைய தோல்விக்கு காரணம். அதிலும் முதல் இன்னிங்ஸில் நாங்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம் என நினைக்கிறேன். ஆனாலும் நாங்கள் அடுத்த போட்டியில், வலுவான நிலையில் மீண்டும் எங்களது வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்ற நம்பிக்கையுள்ளது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சயீத் முஷ்டாக் அலி தொடர்: இறுதிச்சுற்றில் தமிழ்நாடு - பரோடா மோதல்!