டெல்லி: திருமணமாகி புது மாப்பிள்ளையாக இருக்கும் பும்ரா தனது ஹனிமூனை கொண்டாட மாலத்தீவு செல்லுமாறும், ஐபிஎல் நடைபெறும் ஏப்ரல் - மே மாதம் அங்கு சிறப்பாக இருக்கும் எனவும் கூறி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் அவருக்கு வேடிக்கையாக வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டிவி தொகுப்பாளர் சஞ்சனா கணேசன் என்பவரை இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நேற்று (மார்ச் 15) திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து சக வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலதரப்பினரும் இவருக்கு வாழ்த்துகளைக் குவித்துவருகின்றனர்.
பும்ரா வாழ்த்து தெரிவிக்கிறேன் என்ற பெயரில் ராஜஸ்தான் ராயல்ஸ் ஐபிஎல் அணி நிர்வாகம் வேடிக்கையான ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளது. பும்ராவுக்கு வாழ்த்துகள். ஏப்ரல் - மே மாதங்களில் மாலத்தீவு செல்ல சிறந்த நேரம் என்பதை செவி வழியில் அறிந்தோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
-
Congratulations, guys! 🎉
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
We hear Maldives is great in April - May 😬 https://t.co/K3cBgz6cBS
">Congratulations, guys! 🎉
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2021
We hear Maldives is great in April - May 😬 https://t.co/K3cBgz6cBSCongratulations, guys! 🎉
— Rajasthan Royals (@rajasthanroyals) March 15, 2021
We hear Maldives is great in April - May 😬 https://t.co/K3cBgz6cBS
ஏப்ரல் 9 முதல் மே 30 வரை ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கும் நிலையில், அச்சுறுத்தல்மிக்க பந்துவீச்சாளரான பும்ரா புதுமாப்பிள்ளையாக உள்ளதால், அவர் தனது தேனிலவை கொண்டாட நடைபெறவிருக்கும் ஐபிஎல் தொடரிலிருந்து டைவர்ஷன் ஆகி அங்கு செல்ல வேண்டும் என மறைமுகமாக நையாண்டி செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியில் விளையாடும் பும்ரா, எதிரணி வீரர்களுக்கு தனது அசுர வேகப்பந்துவீச்சால் அச்சுறுத்தல் அளிப்பதுடன், சிறந்த பேட்ஸ்மேன்களுக்கே சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்துவருகிறார்.
இதையடுத்து வரும் ஐபிஎல் தொடரை அவர் விளையாடுவதைத் தவிரக்க வைக்கும்விதமாக இப்படியொரு ட்வீட் பதிவு பகிரப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோவாவில் காதலியைக் கரம்பிடிக்கவிருக்கும் பும்ரா!