இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக, நடைபெற்ற முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கலே கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து, தனது முதல் இன்னிங்ஸில் 381 ரன்களை எடுத்தது.
அதன்பின் தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை எடுத்துள்ளது. இதில் கேப்டன் ஜோ ரூட் 67 ரன்களுடனும், ஜானி பேர்ஸ்டோ 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 50ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,117 ரன்களையும் எடுத்து, இங்கிலாந்து அணிக்காக அதிக ரன்களை எடுத்தவர் பட்டியலில் ஆறாம் இடத்திற்கும் முன்னேறியுள்ளார்.
-
Yes skipper 5️⃣0️⃣
— England Cricket (@englandcricket) January 23, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scorecard: https://t.co/amgffKzDdu#SLvENG pic.twitter.com/RbXZPhjGsT
">Yes skipper 5️⃣0️⃣
— England Cricket (@englandcricket) January 23, 2021
Scorecard: https://t.co/amgffKzDdu#SLvENG pic.twitter.com/RbXZPhjGsTYes skipper 5️⃣0️⃣
— England Cricket (@englandcricket) January 23, 2021
Scorecard: https://t.co/amgffKzDdu#SLvENG pic.twitter.com/RbXZPhjGsT
முன்னதாக, இப்பட்டியலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜெஃப்ரி பாய்காட் 8,114 ரன்களுடன் ஆறாம் இடத்திலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பட்டியலில் அலெஸ்டர் குக் 12,472 ரன்களுடன் முதலிடத்திலும், கிரஹாம் கூர் 8,900 ரன்களுடன் இரண்டாம் இடத்திலும், அலெக் ஸ்டூவார்ட் 8,463 ரன்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.
இதையும் படிங்க: இங்கிலாந்து தொடரில் குல்தீப்பிற்கு இடம்?