இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்னும் சில மணித்துளிகளில் இன்று நாக்பூரில் தொடங்கவுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. ரசிகர்களால் ஹிட்மேன் என்றழைக்கப்படும் ரோஹித் சர்மா இதுவரை, அனைத்து விதமான போட்டிகளிலும் 398 சிக்சர்களை விளாசியுள்ளார். (ஒருநாள் போட்டியில் - 232, டெஸ்ட் -51, டி20 - 115)
இன்று நடைபெறும் போட்டியில் அவர் இரண்டு சிக்சர்களை விளாசினால், சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 400 சிக்சர்களை அடித்த முதல் இந்திய வீரர் என்ற புதிய சாதனை ஒன்றைப் படைப்பார். அனைத்து விதமான போட்டிகளில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர்களில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ்கெயில் 576 சிக்சர்களுடன் முதலிடத்திலும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி 476 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.
இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்குத் தொடங்குகிறது.
இதையும் படிங்க: மீண்டும் டையில் முடிந்த இங்கிலாந்து - நியூசிலாந்து இறுதிப்போட்டி; மீண்டும் ஒரு சூப்பர் ஓவர்... உலகக்கோப்பை தேஜாவூ!