டெல்லி: இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரந்தீப் சிங் அளித்துள்ள பேட்டியில்:
"ஷிகர் தவானை இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பயன்படுத்தாது எனக்கு ஆச்சரியத்தையே தந்தது. தவான் ஐபிஎல்லில் சிறப்பாகச் செயல்பட்டார். ஆஸ்திரேலியாவிலும் சிறப்பாகச் செயல்பட்டார். அவர் மனதளவில் மிகவும் வலிமையானவர். ஒரு போட்டியின் மூலம் அவரைத் தீர்மானித்துவிட முடியாது.
அணி நிர்வாகம் மாற்று வீரர்களை முயற்சிக்கலாம். ஆனால் எனது பார்வையில் இடது, வலது பேட்ஸ்மேன்களை (ரோஹித் - தாவன்) உபயோகிப்பதே உலகக் கோப்பையில் இந்தியாவுக்கான சிறந்த வழி" என்றார்.
ஐபிஎல் போட்டிகளே உலகக் கோப்பை டி20 அணியை தீர்மானிக்கும் என்றும், குல்தீப்பிற்கும், சாஹலுக்கும் அதிக போட்டிகளில் வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்.
கோலி இதுவரை ஐபிஎல் தொடரை வென்றதில்லை என்பதற்காவெல்லாம் அவரின் கேப்டன்சியை சந்தேகிப்பது நல்லதல்ல என்றும் டி20 அணியின் கேப்டனாக விராட் கோலியே நீடிக்கவேண்டும் என்றும் சரந்தீப் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒருநாள் போட்டியில் சச்சின் மைல்கல்லை எட்டிய நாள் இன்று!