சாலைப்பாதுகாப்பு உலக டி20 கிரிக்கெட் தொடர் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில், இலங்கை லெஜண்ட்ஸ் அணி, தென்ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணியை எதிர்கொண்டது.
டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் தென் ஆப்பிரிக்க அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில், ஆண்ட்ரூ புட்டிக் மட்டும் நிலைத்து நின்று விளையாடி 39 ரன்களை சேர்த்தார்.
மற்ற வீரர்கள் அனைவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர். இதனால் 18.5 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க லெஜண்ட்ஸ் அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய இலங்கை அணியினர் அதிரடியாக விளையாடினர். கேப்டன் திலகரத்ன தில்சன் அரைசதம் அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன் மூலம் இலங்கை லெஜண்ட்ஸ் அணி, 13.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது.
இதையும் படிங்க: எஸ்சிஜி மைதானத்தில் கிரிக்கெட் வீராங்கனையின் சிலை