ஐபிஎல், ஐஎஸ்எல் பாணியில் இந்தியாவில் பேட்மிண்டன் ப்ரீமியர் லீக் தொடர் நடைபெற்றுவருகிறது. இதில், மொத்தம் ஏழு அணிகள் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் ஒவ்வொரு அணியும் மற்ற ஆறு அணிகளுடன் மோதும். அதில், 18 புள்ளிகள் எடுக்கும் அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும்.
அந்தவகையில், இந்தத் தொடரில் ஏற்கனவே சென்னை சூப்பர்ஸ்டார்ஸ் 19 புள்ளிகளுடனும் நார்தர்ன் ஈஸ்டன் வாரியர்ஸ் அணி 18 புள்ளிகளுடனும் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன. இதைத்தொடர்ந்து, புனே 7 ஏசஸ் அணி விளையாடிய நான்கு போட்டிகளில் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் அவாதே வாரியர்ஸ் அணி 13 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் இருந்ததால் அரையிறுதிச் சுற்றுக்கு எந்த அணி முன்னேறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் புனே வீராங்கனை ரித்துபர்னா தாஸ் 15-13, 15-12 என்ற நேர் செட் கணக்கில் அவாதே வாரியர்ஸின் பெய்வேன் ஸாங்கை வீழ்த்தி ஒரு புள்ளி பெற்றார்.
இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவில் புனேவின் கியான் யூ லோ, அவாதே வாரியர்ஸின் ஷுபாங்கர் தேவை 15-12, 15-14 என்ற நேர் செட் கணக்கில் போராடி வென்றார். இதேபோல், ஆடவர் இரட்டையர் பிரிவில் புனேவின் சிராக் ஷெட்டி - ஹென்ட்ரா செதியவான் இணை, அவாதே வாரியரஸைச் சேர்ந்த கோ சூங் ஹியூன் - ஷின் பேக் ஜோடியை வீழ்த்தியது.
-
Previous Tie 👉🏻 0-5 defeat! 😞
— PBL India (@PBLIndiaLive) February 3, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Tonight 👉🏻 1-4 win! 😍
Making 🔥 comebacks ft. @7acespune. 😏#RiseOfTheRacquet #PBLSeason5 #AWDvPUN pic.twitter.com/2yn48yn9KH
">Previous Tie 👉🏻 0-5 defeat! 😞
— PBL India (@PBLIndiaLive) February 3, 2020
Tonight 👉🏻 1-4 win! 😍
Making 🔥 comebacks ft. @7acespune. 😏#RiseOfTheRacquet #PBLSeason5 #AWDvPUN pic.twitter.com/2yn48yn9KHPrevious Tie 👉🏻 0-5 defeat! 😞
— PBL India (@PBLIndiaLive) February 3, 2020
Tonight 👉🏻 1-4 win! 😍
Making 🔥 comebacks ft. @7acespune. 😏#RiseOfTheRacquet #PBLSeason5 #AWDvPUN pic.twitter.com/2yn48yn9KH
இறுதியில், புனே 7 ஏசஸ் அணி 4-1 என்ற புள்ளிகள் கணக்கில் அவாதே வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 18 புள்ளிகளுடன் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் தோல்வியடைந்தன் மூலம், அவாதே வாரியர்ஸ் அணிக்கு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு மங்கியுள்ளது.
ஏனெனில், அவாதே வாரியர்ஸ் அணி தனது கடைசி போட்டியில், புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலிருக்கும் பெங்களூரு ரப்டர்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இதில், அவாதே வாரியர்ஸ் அணி நான்கு புள்ளிகள் பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும்.
மறுமுனையில், பெங்களூரு ரப்டர்ஸ் அணிக்கு இப்போட்டியைத் தவிர்த்து மும்பை ராக்கெட்ஸ் அணியுடன் ஒரு போட்டியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதனால், பெங்களூரு அணிக்கு கைவசம் இரண்டு போட்டிகள் இருப்பதால் அந்த அணி அரையிறுதிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ‘ஒலிம்பிக்ஸில் தங்கம் வெல்வதே எனது குறிக்கோள்’ - பி.வி. சிந்து