2019-20ஆம் ஆண்டுக்கான பிக் பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இதன் கடைசி லீக் போட்டியான 56ஆவது லீக் போட்டியில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியை எதிர்த்து பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி விளையாடியது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மெல்போன்ர் ஹீட்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இந்தப் போட்டி மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் ஹீட்ஸ் அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது.
பின்னர் களமிறங்கிய ஹீட்ஸ் அணியில் தொடக்க வீரர் சாம் 6 ரன்களிலும், பென் கட்டிங் 27 ரன்களிலும் வெளியேறினர். இதையடுத்து கேப்டன் கிறிஸ் லின் - டி வில்லியர்ஸ் இணை அணியின் ஸ்கோரை உயர்த்து என நினைத்திருக்கையில், லின் 14 ரன்களிலும் டி வில்லியர்ஸ் 6 ரன்களிலும் வெளியேறி அதிர்ச்சியளித்தனர். பின்னர் வந்த மேட் ரென்ஷாவின் அதிரடியால் ஹீட்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து களமிறங்கிய மெல்போர்ன் ரெனிகேட்ஸ் அணியில் தொடக்க வீரர் டாம் கூப்பர் அதிரடியாக ஆடி 23 ரன்களில் ஆட்டமிழக்க, கிறிஸ்டியன் 8 ரன்களிலும், பெப்ஸ்டர் 14 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் 9.4 ஓவர்களுக்கு ரெனிகேட்ஸ் அணி 68 ரன்களுக்கு முக்கியமான மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த தொடக்க வீரர் ஃபிஞ்ச் - நபி இணை நிதானமாக ஆடி விக்கெட்டுகளை கொடுக்காமல் ரன்கள் சேர்த்தது.
இந்த இணையைப் பிரிக்க முடியாமல் ஹீட்ஸ் அணி பந்துவீச்சாளர்கள் திணறினர். இதற்கிடையே ஃபிஞ்ச் அரைசதம் கடந்து அதிரடியாக ஆடினார். ரெனிகேட்ஸ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்த, அடுத்த பந்தில் இரு ரன் எடுத்து வெற்றிபெற்றனர். இறுதியாக ரெனிகேட்ஸ் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
-
SIX!
— KFC Big Bash League (@BBL) January 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
Scores are level at Marvel Stadium #BBL09 pic.twitter.com/Ywt1Y68vZ5
">SIX!
— KFC Big Bash League (@BBL) January 27, 2020
Scores are level at Marvel Stadium #BBL09 pic.twitter.com/Ywt1Y68vZ5SIX!
— KFC Big Bash League (@BBL) January 27, 2020
Scores are level at Marvel Stadium #BBL09 pic.twitter.com/Ywt1Y68vZ5
இந்தப் போட்டியில் அடைந்த தோல்வியால் பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற முடியாமல் வெளியேறியது. 14 போட்டிகளில் ஆடிய பிரிஸ்பேன் ஹீட்ஸ் அணி 6 வெற்றி, 8 தோல்விகளுடன் 7ஆம் இடத்தில் தொடரை நிறைவு செய்துள்ளது. இதனால் 13 புள்ளிகளுடன் சிட்னி தண்டர்ஸ் அணி ப்ளே - ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இதையும் படிங்க: கில்கிறிஸ்ட்டின் சாதனையை உடைத்த டி காக்