ETV Bharat / sports

இம்ரான் கான்,ஷகிப் அல் ஹசன் வரிசையில் இணைந்த ரஷீத் கான்...! - IPL

ஆப்கானிஸ்தான் அணிக்கு இளவயது கேப்டனாக பதவியேற்ற ரஷீத் கான் பல சாதனைகளை படைத்துள்ளார்.

Rashid Khan
author img

By

Published : Sep 9, 2019, 12:49 AM IST

பொதுவாக ஒவ்வொரு நாட்டிலும் இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்துவதும், அவர்கள் இளவயதிலேயே சர்வதேச போட்டிகளில் விளையாடுவதும் வழக்கமான ஒன்றுதான். அதேபோல் தான் ஆப்கானிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் ரஷீத் கானும் 17 வயதில் தன்னுடைய முதல் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தார். இவர் தன்னுடைய பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

ரஷீத் கான்  Rashid Khan  Records  சாதனைகள்  Test match  IPL  20-20
ஐபிஎல்லில் ரஷீத் கான்

கவனம் பெற்றது இவர் மட்டுமல்ல, இவரால் ஆப்கானிஸ்தான் அணியும்தான். ஐபிஎல்லில் களமிறங்கிய இவரின் பந்துக்கு அனைவரும் தங்களது பேட்டால் பதில் கூற முடியாமல் திணறினார்கள். இந்நிலையில், யாரும் எதிர்பாரா வண்ணம் ஆப்கானிஸ்தான் அணியின் டெஸ்ட் கேப்டனாக ரஷீத் கான் நியமிக்கப்பட்டார். இதனால், டெஸ்ட் போட்டியில் மிக குறைந்து வயதில் கேப்டனாக பதவியேற்றவர் என்ற சாதனையை பெற்றார்.

இந்த சாதனையை முறியடிக்க இன்னொருவர் பிறந்துதான் வர வேண்டும். இதுமட்டுமல்லாமல், நடைபெற்றுக் கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரஷீத் கான் 51 ரன்களையும், 5 விக்கெட்டுகளையும் எடுத்து மற்றுமொரு உலக சாதனையையும் செய்துள்ளார்.

இளம் வயது டெஸ்ட் கேப்டன் ரஷீத் கான்

50 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இளவயது கேப்டனாக ஷகிப் அல் ஹசனின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனையை ரஷீத் கான் 20 வயதில் செய்து காட்டியுள்ளார். ஆனால், ஷகிப் அல் ஹசன் 22 வயதில்தான் இச்சாதனையை செய்தார்.

அடுத்த சாதனையாக, கேப்டனான அறிமுக போட்டியிலேயே 50 ரன்கள் + 5 விக்கெட்டுகள் வீழ்த்திய டெஸ்ட் கேப்டன் வரிசையில் நான்காம் இடம் பிடித்துள்ளார். இவருக்கு முன்னதாக, இங்கிலாந்தின் ஸ்டான்லி ஜாக்சன் (1905), பாகிஸ்தானின் இம்ரான் கான் (1982), வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் (2009) ஆகியோர் முதல் மூன்று இடத்தில் உள்ளனர்.

இளம் வயது சாதனையாளர் ரஷீத் கான்

ரஷீத் கானின் சிறந்த பந்துவீச்சாலும், கேப்டன்சிப்பாலும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெறும் நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.

Intro:Body:

Raseeth khan Test team afg. captain Records at the young age

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.