ETV Bharat / sports

மீண்டும் ஆப்கானிஸ்தான் அணிக்கு புதிய கேப்டன்...ஆனால் இம்முறை ரஷித் கான்! - ஆப்கானிஸ்தான் அணி ரஷித் கான்

டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் புதிய கேப்டான ரஷித் கான் நியமிக்கப்பட்டுள்ளார்.

Rashid khan
author img

By

Published : Jul 12, 2019, 9:27 PM IST

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாக அதிரடி முடிவுகளை வெளியிட்டு அனைவருக்கும் ஷாக் அளிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது. அந்த வகையில் தற்போது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு குழப்பம் கலந்த மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது.

ஆம், 20 வயதே ஆன இளம் அதிரடி வீரரான ரஷித் கானை டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கான ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் இன்று மாலை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Rashid khan
ரஷித் கான்

முன்னதாக உலகக்கோப்பை தொடருக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் ஒருநாள் அணியின் கேப்டனாக இருந்த அஸ்கர் ஆப்கானை நீக்கிவிட்டு, குலாப்துன் நயீப் நியமிக்கப்பட்டார். புதிய கேப்டனுடன் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய ஒன்பது போட்டிகளிலும் தோல்வியை பெற்று தொடரிலிருந்து வெளியேறியது. அதே போன்று உலகக்கோப்பை தொடரின்போது, அந்த அணியின் விக்கெட் கீப்பர் முகம்மது ஷாஷாத் காயம் காரணமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அந்த வீரர் தனக்கு காயம் ஏற்படவில்லை தான் முழு உடற்தகுதியுடன் இருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மீது குற்றச்சாட்டை வைத்தார்.

Rashid khan
ரஷித் கான்

மேலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சில் சொதப்பிய ரஷித் கான் மீது பலரும் சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். இந்த தொடரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யவில்லை என்றாலும், இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் வெற்றிக்கு அருகில் சென்று தோல்வியைத் தழுவியது.

உலகக்கோப்பைக்கு பின் தற்போது மீண்டும் ஆப்கானிஸ்தான் அணி புதிய கேப்டனாக ரஷித் கானை பெற்றுள்ளது. மேலும் துணைக் கேப்டனாக முன்னாள் கேப்டன் அஸ்கர் ஆப்கன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் டி20 அணியின் கேப்டனாக இருந்த ரஷித் கானுக்கு தற்போது டெஸ்ட், ஒருநாள் கேப்டன் என்ற கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Rashid khan
ரஷித் கான்

ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரஷித் கான், ஆப்கானிஸ்தான் அணியின் சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமல்லாது, சில சமயங்களில் தனது அதிரடி பேட்டிங்காலும் அசத்தும் வல்லமை பெற்றவர். இது தவிர பல்வேறு டி20 தொடர்களிலும் இவர் பங்கேற்றுள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மிகக் குறைந்த(44) போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய நபர் என்ற சாதனையையும் ரஷித் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.