ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் தொடங்க இன்னும் இரண்டு மாதங்கள் மட்டுமே உள்ளது. இதனை முன்னிட்டு தொடரில் பங்கேற்கும் அணிகள் தங்களது அணியை பலப்படுத்தும் வேலையில் தீவிரம் காட்டிவருகின்றனர். அந்தவகையில், ஐபிஎல் முதல் சீசனின் சாம்பியன் பட்டம் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ராப் கெசல் நியமிக்கப்பட்டுள்ளார்.
36 வயதான இவர், தெற்கு ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்துள்ளார். அதன்பின் அயர்லாந்து அணியின் துணை பயிற்சியாளராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பொறுப்பு வகித்து அந்த அணியை பலப்படுத்தினார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கென்று பிரத்யேக 'விக்கெட்ஸ்அப்' சென்ற செயலியை உருவாக்கி கேன் ரிச்சர்ட்சன் போன்ற பல்வேறு பந்துவீச்சாளர்களை உருவாக்கியுள்ளார்.
ராப் கசெலின் நியமனத்தால், கடந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஸ்டெஃப்பான் ஜோன்ஸ் இம்முறை ஐபிஎல் நடக்காத நாட்களில் அணியின் வளர்ச்சிக்கான பயிற்சியாளராக இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பைத் தொடருக்கு தயாராவதற்கு ஒருநாள் போட்டிகள் பயன்படும்: ரவி சாஸ்திரி