இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க மகளிர் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இதன் முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதால், இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்க மகளிர் அணிக்கு, லீ - லாரா இணை தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 76 ரன்கள் சேர்த்த நிலையில், லீ 40 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து த்ரிஷா செட்டி களமிறங்கினார்.
அதையடுத்து நிதானமான ரன்களைச் சேர்த்த நிலையில், த்ரிஷா 22 ரன்களிலும், லாரா 69 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த மிக்னோன் 44, லூஸ் 12 என ரன்கள் சேர்த்தனர். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்கள் சேர்த்தது.
தொடர்ந்து 248 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ப்ரியா புனியா 20 ரன்களிலும், ஜெமீமா ரோட்ரிக்ஸ் 18 ரன்களிலும் ஆட்டமிழக்க, தொடர்ந்து பூனம் - கேப்டன் மிதாலி ராஜ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை தென் ஆப்பிரிக்க அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டது.
அதிலும் தென் ஆப்பிரிக்க கேப்டன் லூஸ் வீசிய 20ஆவது ஓவரில் அடுத்தடுத்து பவுண்டரிகளை மிதாலி ராஜ் விளாசினார். ஒருமுனையில் சிறப்பாக ஆடிய மிதாலி ராஜ் சர்வதேச போட்டிகளில் தனது 53ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார். அதேபோல் மறுமுனையில் பூனம் தனது 12ஆவது அரைசதத்தைப் பதிவு செய்தார்.
பின்னர் அணியின் ஸ்கோர் 195 ரன்கள் இருக்கையில், கேப்டன் மிதாலி ராஜ் 66 ரன்களிலும், அடுத்த ஒரு ரன்னில் பூனம் 65 ரன்களிலும் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது. அடுத்து வந்த நட்சத்திர வீராங்கனை ஹர்மன்ப்ரீத் கவுர் அதிரடியான இன்னிங்ஸ் ஆடி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
-
A good day on the field for #TeamIndia after wrapping up the 2nd ODI in great fashion. Final ODI in 3 days. See you there 🇮🇳🇮🇳 #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/It2OvThNTc
— BCCI Women (@BCCIWomen) October 11, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">A good day on the field for #TeamIndia after wrapping up the 2nd ODI in great fashion. Final ODI in 3 days. See you there 🇮🇳🇮🇳 #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/It2OvThNTc
— BCCI Women (@BCCIWomen) October 11, 2019A good day on the field for #TeamIndia after wrapping up the 2nd ODI in great fashion. Final ODI in 3 days. See you there 🇮🇳🇮🇳 #TeamIndia #INDvSA @Paytm pic.twitter.com/It2OvThNTc
— BCCI Women (@BCCIWomen) October 11, 2019
இறுதியாக இந்திய அணி 48 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. அதிரடியாக ஆடிய ஹர்மன் 27 பந்துகளில் 39 ரன்களை எடுத்தார். இந்த ஆட்டத்தில் வெற்றிபெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக ஆடிய பூனம் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதையும் படிக்கலாமே: #20YearsOfMithaliRaj: மகளிர் கிரிக்கெட்டின் கதவுகளைத் தகர்த்த மிதாலி!