இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி டிசம்பர் 26ஆம் தேதி மெல்போர்னில் நடைபெறுகிறது. ஏற்கெனவே இத்தொடரில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ரஹானே பந்துவீச்சாளர்களின் கேப்டன்
இந்நிலையில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ள இஷாந்த் சர்மா, இந்திய அணியின் கேப்டனாக செயல்படவுள்ள ரஹானே மிகவும் அமைதியான மற்றும் உறுதியான நபர். முக்கியமாக அவர் பந்துவீச்சாளர்களின் கேப்டன்.
விராட் கோலி களத்தில் இல்லாத நேரத்தில் ரஹானே கேப்டனாக செயல்பட்டால், "அவர் பந்துவீச்சாளர்களிடம் உங்களுக்கு எந்த மாதிரியான பீல்டிங் தேவைப்படும்? நீங்கள் பந்துவீசுவதற்கு என்ன தேவை? நீங்கள் பந்துவீச தயாராக உள்ளீர்களா? என பந்துவீச்சாளர்கள் மீது அக்கறை காட்டுவார். ஏனெனில் அவருக்கு பந்துவீச்சாளர்களை எவ்வாறு கையாண்டால், அவர்களிடமிருந்து பயனை பெறமுடியும் என்பது தெரியும்.
மேலும் அவர் கேப்டன் பொறுப்பில் இருக்கும் போதே, உங்களுக்கு அவரைப் பற்றி தெரியவரும். எப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் அணியினரிடம் கடிந்துகொள்ளாமல் இயல்பாகவே உரையாடும் தன்மை கொண்ட நபர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:இங்கிலாந்து தொடரில் முகமது ஷமி பங்கேற்பதில் சந்தேகம்?