ETV Bharat / sports

'ரஹானேவின் ஆட்டம் சிறப்பு' - ரிக்கி பாண்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசிய இந்திய கேப்டன் ரஹானேவை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பாராட்டியுள்ளார்.

Rahane has done a great job to pick up pieces from Adelaide debacle: Ponting

author img

By

Published : Dec 28, 2020, 9:11 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் கேப்டன் ரஹானே சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 12ஆவது சதத்தைப் பதிவுசெய்தார்.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், "அடிலெய்டில் ஏற்பட்ட தோல்வியிலிருந்து மீழ்வதற்கும், இந்திய அணியைச் சிறப்பாக வழிநடத்துவதற்கும் ரஹானேவின் இந்தச் சதமானது உதவியாக இருக்கும்.

இப்போட்டியில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படும் ரஹானே, அப்பதவிக்கு எந்தக் குறைவும் இன்றி தனது பணியைச் செய்து முடித்துள்ளார். ஏனெனில் விராட் கோலி இல்லாமல் அணியை வழிநடத்துவது மட்டுமின்றி, அவர் சதமடித்தும் இந்திய அணிக்குப் பங்களிப்பைச் செய்துள்ளார்.

மேலும் இப்போட்டியில் ரஹானே பவுண்டரிகள் அடிக்க முற்படாமல், புஜாராவைப் போன்று நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் அவர் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களைத் திணறவைத்திருந்தார் என்பதே உண்மை" என்று பாராட்டியுள்ளார்.

இன்று நடைபெற்றுவரும் மூன்றாம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவரும் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்களை எடுத்துள்ளது.

இதையும் படிங்க:பாக்ஸிங் டே டெஸ்ட்: ரஹானே, ஜடேஜா ஆட்டத்தால் முன்னிலைப் பெற்ற இந்தியா; பதிலடி கொடுக்குமா ஆஸ்திரேலியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.